
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குஜராத்தில் 22 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவின் ஆட்சியே நடந்து வருகிறது. தற்போது குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அங்குள்ள சோம்நாத் கோயிலுக்கு சென்றுள்ளார்...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
குஜராத்தில் 22 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவின் ஆட்சியே நடந்து வருகிறது. தற்போது குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அங்குள்ள சோம்நாத் கோயிலுக்கு சென்றுள்ளார். அவருடன் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேலும் உடன் சென்றுள்ளார்.
சோம்நாத் கோவிலின் நடைமுறைப்படி, இந்துக்கள் அல்லாதோர் அதற்காக வைக்கப்பட்டுள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்ல வேண்டும். கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி அங்கிருந்த இந்துக்கள் அல்லாதோர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதாக பாஜக சர்ச்சையை கிளப்பியது.
இதைத் தொடர்ந்து இச்சம்பவம் ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்த காங்கிரஸ் கட்சி, இது பாஜகவின் தரம் தாழ்ந்த செயல் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து சோம்நாத் கோயிலின் அறக்கட்டளை செயலாளர் பி.கே.லஹேரி கூறுகையில், ராகுல் காந்தி அவர்கள் கோயிலில் உள்ள வருகைப் பதிவேட்டில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்துக்கள் அல்லாதவர்களுக்கான வருகைப் பதிவேடு பயன்பாட்டில் உள்ளது. எனினும், ராகுல் காந்தி அதில் கையெழுத்திடவில்லை. மேலும், ராகுல் காந்தி வருகைப் பதிவேட்டில் “ இது எழுச்சியூட்டும் இடம் ” என்று குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி இந்துக்கள் அல்லாதவர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதாக கூறிய செய்திக்கு ஆதாரம் என்றப் பெயரில் சில படங்கள் ஊடகங்களில் வெளியாகின. அவற்றை ஆராய்ந்து பார்த்ததில், அதில் ராகுல் காந்தியின் பெயர் ராகுல் காந்திஜி என்று இருக்கும். ஒருவேளை உடன் சென்ற அகமது படேல் மரியாதை நிமித்தமாக ராகுல் காந்தியின் பெயரை ராகுல் காந்திஜி என்று எழுதி இருந்தாலும், தனது பெயரை எழுத்து பிழையுடன் எழுதிருப்பாரா?.
ஆக, ராகுல் காந்தி இந்துக்கள் அல்லாதோர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதாகப் பரவிய செய்தியும் பொய், அதற்காக காண்பித்த ஆதாரங்களும் பொய்யே.