YouTurn

மாநில கட்சிகளில் பணக்கார கட்சிகளாக திமுக, அதிமுக டாப்.

மாநில கட்சிகளில் பணக்கார கட்சிகளாக திமுக, அதிமுக டாப்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களது வரவு-செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். இந்நிலையில், 20151-2016-ம் ஆண்டில் அரசியல் கட்சிகள் சமர்பித்த வரவு-செலவு கணக்கு விவரங்களை...

பரவிய செய்தி

தேசிய கட்சிகளில் பணக்கார கட்சிகளாக ரூ893 கோடியுடன் பா.ஜ.க முதல் இடத்திலும், இந்திய தேசிய காங்கிரஸ் ரூ758 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மாநில கட்சிகளில் திமுக ரூ77 கோடியுடன் முதல் இடத்திலும், அதிமுக 54 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

விரிவான விளக்கம்

இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களது வரவு-செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். இந்நிலையில், 20151-2016-ம் ஆண்டில் அரசியல் கட்சிகள் சமர்பித்த வரவு-செலவு கணக்கு விவரங்களை குறித்து “ ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் “ ஆய்வு செய்தது.


இந்த ஆய்வில், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் வருவாய் உள்ளிட்ட சொத்து மதிப்பு பற்றி வெளியிட்ட அறிக்கையில் ஏழு தேசிய கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதல் இடத்தையும், இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 2004-2005-ம் ஆண்டில் பா.ஜ.க-வின்  சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து மதிப்பானது ரூ122 கோடியே 93 லட்சம் ஆகும். ஆனால், 2015-2016-ம் ஆண்டில் பா.ஜ.க-வின் சொத்து மதிப்பானது ரூ893 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸின் சொத்து மதிப்பானது ரூ167.35 கோடியில் இருந்து ரூ758.79 கோடியாக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற சில தேசிய கட்சிகளின் சொத்துக்கள் மட்டுமே நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளன என்று கூறியுள்ளனர்.


நாடு முழுவதும் உள்ள 47 அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளில் 32 கட்சிகள் மட்டுமே கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 2015-2016-ம் ஆண்டில் கணக்கு தாக்கல் செய்த 32 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாயானது ரூ221 கோடியாகும். இதில் 49% தொகை, அதாவது ரூ110 கோடியானது இன்னும் செலவழிக்கப்படாமல் உள்ளது. அதிக வருவாய் பெற்ற மாநிலக் கட்சிகளில் திமுக ரூ77.63 கோடியுடன் முதல் இடத்திலும், அதிமுக ரூ54.93 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. எனினும், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களது வருவாயில் 80 சதவீதத்தை இன்னும் செலவழிக்காமல் உள்ளனர்.


நிதியானது எங்கிருந்து வந்தது என்பதே தெரியாத அடிப்படையில் மாநிலக் கட்சிகளுக்கு ரூ40 கோடியே 61 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 14 கட்சிகள் வருவாய்க்கு அதிகமாக செலவழித்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வருவாயானது ஆண்டாண்டுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை இந்த ஆய்வானது தெளிவுப்படுத்தியுள்ளது.

சுருக்கமாக

தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அளிக்கும் நிதிநிலை அறிக்கையை மையமாகக் கொண்டு 20151-2016 நிதியாண்டில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வருவாய் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க