YouTurn

பெண்களுடன் நேரு நெருக்கமாக இருக்கும் புகைப்படமா ?

பெண்களுடன் நேரு நெருக்கமாக இருக்கும் புகைப்படமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஒரு தலைவரின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் அவர்களை பற்றிய சில தவறானப் படங்களைப் பரப்புவது வழக்கமாகவே இருந்து வருகின்றன. இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு தேசத்தின் முதல் பிரதம அமைச்சராக பதவியேற்றவர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள். இன்றளவும் நேருவின் நிர்வாகத் திறமை மற்றும் காதல் விவகாரங்கள் பற்றி...

பரவிய செய்தி

கவர்ச்சியான உடையணிந்து நடனமாடும் பெண்களுடன் இருக்கும் ஜவஹர்லால் நேருவின் அரியப் புகைப்படம்.

விரிவான விளக்கம்

ஒரு தலைவரின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் அவர்களை பற்றிய சில தவறானப் படங்களைப் பரப்புவது வழக்கமாகவே இருந்து வருகின்றன.


இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு தேசத்தின் முதல் பிரதம அமைச்சராக பதவியேற்றவர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள். இன்றளவும் நேருவின் நிர்வாகத் திறமை மற்றும் காதல் விவகாரங்கள் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன.


அவற்றைத் தொடர்ந்து நேரு பல பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையங்களில் இன்றளவும் வைரலாகி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் நேரு, கவர்ச்சியான உடைகளை அணிந்து இருக்கும் பெண்களின் மத்தியில் இருக்கும் படம். இவ்வாறு இருக்கையில், நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இப்படங்கள் பகிரப்பட்டன.


உலகில் பிரபலமான பல நடிகைகள் தங்களது நடிக்கும் தொழிலை நடனத்தில் இருந்து தொடங்கியுள்ளனர். அவ்வாறு கூட்டாக நடனமாடும் தொழிலில் ஈடுபட்ட 1910 மற்றும் 1920 காலகட்டத்தைச் சேர்ந்த பல பெண்களின் கருப்பு, வெள்ளை புகைப்படங்களின் தொகுப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகின. இவர்கள் அனைவரும் இணைந்து இசையுடன் பாடிக்கொண்டே நடனமாடும் கலை நிகழ்ச்சியை வழங்குபவர்கள். அத்தகைய பெண்களின் புகைப்படத் தொகுப்புகளில் ஒன்று தான் இப்படங்கள்.


நிகழ்ச்சியில் நடனமாடும் பெண்களின் படங்களையும், நேருவின் படங்களையும் போட்டோஷாப் மூலம் இணைத்து பரப்பியுள்ளனர்.


எனினும், நேருவிடம் நெருக்கமாக இருக்கும் பல பெண்களின் படங்கள் இணையத்தில் காணப்படுகின்றன. அவற்றில், பல படங்கள் எதேச்சையாக எடுக்கப்பட்டவை. ஆனால், அவை தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டவையும் ஆகும்.

சுருக்கமாக

1910 மற்றும் 1920 காலகட்டத்தில்  கூட்டமாக பாட்டுபாடிக் கொண்டே நடனமாடும் பெண்களின் படங்களுடன் நேருவின் படத்தை இணைத்து வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க