YouTurn

பூமி அழியப் போகிறதா ?

பூமி அழியப் போகிறதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பல வருடங்களாகவே பூமி அழியப்போகிறது என்ற செய்திகள் வந்துக் கொண்டே இருக்கின்றன . ஆனால் அது போன்ற எந்த ஒரு நிகழ்வுகளும் இதுவரை நடக்கவில்லை . எனினும் மக்கள் மனதில் பூமியின் அழிவைப் பற்றிய பயம் மட்டும் இருக்கத்தான் செய்கிறது . தற்போது இது போன்ற பயம் மேலைநாட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றது . பிளானட்...

பரவிய செய்தி

45 நாட்களுக்குள் நிபிரு என்ற கிரகம் மோதி பூமியானது அழியப் போகிறது என்பது இரகசிய கோட்பாட்டாளர்கள் கணிப்புகள் தெரிவிக்கின்றது . இதை நாசாவும் ஒப்புக்கொண்டு உள்ளது .

விரிவான விளக்கம்

பல வருடங்களாகவே பூமி அழியப்போகிறது என்ற செய்திகள் வந்துக் கொண்டே இருக்கின்றன . ஆனால் அது போன்ற எந்த ஒரு நிகழ்வுகளும் இதுவரை நடக்கவில்லை . எனினும் மக்கள் மனதில் பூமியின் அழிவைப் பற்றிய பயம் மட்டும் இருக்கத்தான் செய்கிறது . தற்போது இது போன்ற பயம் மேலைநாட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றது . பிளானட் எக்ஸ் அல்லது நிபிரு என்படும் கிரகம் 1995 ல் கண்டுபிடிக்கப்பட்டத்தில் இருந்து பூமியை அச்சுறுத்தி வருகிறது . நிபிரு கிரகம் வரும் அக்டோபர் மாதம் பூமியுடன் மோதி அழிவை ஏற்படுத்தும் என்று கூறி வருகின்றனர் .


புளுட்டோ கிரகத்தைத் தாண்டி நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்ற மர்ம அமைப்பை கோளா அல்லது விண் கல்லா என்று கூறாமல் நிபிரு என்று கூறியுள்ளனர் . பிளானட் எக்ஸ்-2017 வருகை என்ற நூலின் ஆசிரியர் டேவிட் மேடே கூறுகையில் , தென்துருவத்தில் இருந்து சூரியனின் சுற்றுப்பாதையில் நிபிரு வருகிறது . இதன் வருகை பற்றி பிளானட் எக்ஸ் என்ற YOUTUBE சேனல் ஒரு வீடியோவை வெளியிட்டனர் என்று கூறினார் .  பூமியில் பல மாற்றங்கள் வந்தாலும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றுக் கூறியுள்ளார் .




இதை பற்றி நாசா கூறியது , நிபிரு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி வருபவை அனைத்தும் இணைய கதைகளே ஆகும் . இந்த கிரகம் 2015 , 2012 , 2003 ஆண்டுகளில் பூமியை தாக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது . இது போன்ற செய்திகள் மக்களிடையே பயத்தை ஏற்படுத்துகிறது . ஆனால் பூமியை இரு பெரும் விண்கற்கள் நெருங்கின்றன என்பதை மட்டும் அறிவித்துள்ளனர் .


சில சதியாலோசனை கோட்பாடு கொண்டவர்கள் பூமியின் அழிவை பற்றி கூறுவர் . அதையெல்லாம் நம்பி இம்மாதிரியான செய்திகளை எவரும் பரப்ப வேண்டாம் . இதுபோன்ற பல செய்திகள் வந்து பொய்யாகி போகின்றன . எனவே மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை .

சுருக்கமாக

ஒருவேளை அழிவு ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும் வெளிப்படையாக யாரும் அறிவிக்க மாட்டார்கள் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க