YouTurn

பூஜை செய்த பிராமணரை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கினார்களா?

பூஜை செய்த பிராமணரை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கினார்களா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மேற்கு வங்கம் மாநிலத்தில் தனது வீட்டில் பிராமணர் ஒருவர் அதிக ஒலியுடன் மணி அடித்து பூஜைச் செய்ததால் அப்பகுதியில் வாழும் இஸ்லாமிய இளைஞர்கள் அவரை தாக்கியதாகக் கூறி ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படங்களுடன் செய்திகள் காணப்படுகிறது. மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் விதமாக இச்சம்பவம்...

பரவிய செய்தி

மேற்கு வங்கம் மாநிலத்தில் பிராமணர் ஒருவர் தனது வீட்டில் பூஜைச் செய்யும் போது அதிகம் ஒலி எழுப்பியதால் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அவரை கொடூரமாகத் தாக்கிய காட்சி.

விரிவான விளக்கம்

 மேற்கு வங்கம் மாநிலத்தில் தனது வீட்டில் பிராமணர் ஒருவர் அதிக ஒலியுடன் மணி அடித்து பூஜைச் செய்ததால் அப்பகுதியில் வாழும் இஸ்லாமிய இளைஞர்கள் அவரை தாக்கியதாகக் கூறி ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படங்களுடன் செய்திகள் காணப்படுகிறது.


மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் விதமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்த வேளையில், கொல்கத்தா காவல்துறை இச்சம்பவம் தொடர்பான உண்மை செய்தியை வெளியிட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்து காவல் துறை அளித்துள்ள தகவலின்படி, வீட்டில் பூஜை செய்யும் பிராமணரை இஸ்லாமிய இளைஞர்கள் தாக்கியதாக கூறிப் பரவி வரும் படங்களும், வீடியோக்களும் தவறானவை. உண்மை என்னவென்றால், கொல்கத்தா அருகில் கோவா பாகன் பகுதியில் உள்ள வீட்டில் நடக்கவிருந்த பூஜைக்காக வந்த ப்ரோகிதர் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதால், அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும், பொதுமக்களும் அவரைத் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ப்ரோகிதரின் மீது 31-08-17 அன்று இரு வேறுப் பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.


பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் மக்கள் இச்சம்பவத்தை தவறாகப் பரப்பி வருகின்றன. எனவே கொல்கத்தா காவல்துறைக்கு உண்மையான செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் கடமை உள்ளது. உங்களிடம் தவறான வாசகங்களுடன் இந்த படங்களும், வீடியோக்களும் வந்தால் தயவு செய்து பகிர வேண்டாம் என்றும், காவல் துறைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் செப்டம்பர் 23-ம் தேதி கொல்கத்தா காவல்துறை தனது முகநூல், ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


கொல்கத்தா காவல்துறையே சம்பவத்தை விளக்கிக் கூறியிருந்தாலும், பலரும் இச்செய்தியை தவறாகப் பரப்பி வருகின்றனர். குறுப்பிட்ட சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் தவறானச் செய்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டிவிடும் செயலைச் செய்து வருகின்றனர்.

சுருக்கமாக

பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டவரை பொதுமக்கள் தாக்கியப் பின் காவலர்கள் கைது செய்ததாக கொல்கத்தா காவல்துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க