YouTurn

புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதையால் நிகழும் விபத்துகள்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதையால் நிகழும் விபத்துகள்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

புத்தாண்டு என்றாலே போதை பொருட்கள் பயன்படுத்துவது வழக்கமாகவே இருக்கிறது. புத்தாண்டு இரவில் நன்றாக குடித்து விட்டு சென்னை மெரினா மற்றும் பாண்டிச்சேரி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வது, சாகசங்கள் என்ற பெயரில் பைக் ரேஸ் செய்வது என்று பலரை அச்சுறுத்தும் செயலை செய்கிறனர். குடித்து விட்டு...

பரவிய செய்தி

2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட புத்தாண்டில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 1-ம் தேதி காலை வரையில் போதை மற்றும் கவனக்குறைவால் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர், 593 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விரிவான விளக்கம்

புத்தாண்டு என்றாலே போதை பொருட்கள் பயன்படுத்துவது வழக்கமாகவே இருக்கிறது. புத்தாண்டு இரவில் நன்றாக குடித்து விட்டு சென்னை மெரினா மற்றும் பாண்டிச்சேரி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வது, சாகசங்கள் என்ற பெயரில் பைக் ரேஸ் செய்வது என்று பலரை அச்சுறுத்தும் செயலை செய்கிறனர். குடித்து விட்டு செய்யும் செயல்களால் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வீதிகளில் நடைபோடும் பொது மக்களுக்கும் கூட அதிகளவில் இடையூறுகள் ஏற்படுகின்றன.


போதையில் இருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படுவது மட்டுமின்றி தடுமாற்றங்களால் விபத்தில் சிக்கி பலர் பரிதாபமாக உயிரிழகின்றன. கடந்த ஆண்டுகளில் சென்னையில் மட்டும் புத்தாண்டு இரவுகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பட்டியலை பார்த்தால், யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.



   " புத்தாண்டு தொடக்கமான டிசம்பர் 31 இரவு முதல் ஜனவரி 1 காலை வரையில் 2013-2014-ல் 5 பேர் இறந்தனர் 119 காயமடைந்தனர், 2014-2015-ல்  5 மரணங்கள்  58 பேர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்தது, 2015-2016-ல் 4 பேர் இறந்தனர் 296 படுகாயம். சென்ற ஆண்டில் மட்டும்  5 பேர் உயிரிழந்தனர் 120 படுகாயமடைந்தனர். இவை சென்னையின் நிலவரம் மட்டுமே. இது ஒருபுறம் இருக்கையில் கொண்டாட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காதவாறு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன ".


புத்தாண்டு இரவில் நிகழும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு, புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸ் நடத்தினால் பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வரும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.


எனவே, பிறக்கவிருக்கும் புத்தாண்டில் நலமோடு இருக்க குடி போன்ற போதையை தவிர்த்து, நிதானமாக வாகனங்களில் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

சுருக்கமாக

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸ் நடத்தினால், பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வரும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க