YouTurn

பீமன் மகனின் எலும்பு கூடுகள் குஜராத்தில் கிடைத்ததா ?

பீமன் மகனின் எலும்பு கூடுகள் குஜராத்தில் கிடைத்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மகாபாரத கதையில் வரும் பீமன் அவர்களது மகனின் இராட்சத எலும்பு கூடுகள் என்று கூறி சில புகைப்படங்கள் இணையத்தில் தவறாக பரப்பப்பட்டது . இந்த படங்கள் அனைத்தும் worth 1000 என்ற கிராபிக்ஸ் படங்களுக்கான இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டு தவறான செய்திகளுடன் பரவி வருகின்றது . டிஜிட்டல் கலைஞர்களுக்காக...

பரவிய செய்தி

பீமன் மகனின் இராட்சத எலும்பு கூடுகள் குஜராத்தில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன .

விரிவான விளக்கம்

மகாபாரத கதையில் வரும் பீமன் அவர்களது மகனின் இராட்சத எலும்பு கூடுகள் என்று கூறி சில புகைப்படங்கள் இணையத்தில் தவறாக பரப்பப்பட்டது . இந்த படங்கள் அனைத்தும் worth 1000 என்ற கிராபிக்ஸ் படங்களுக்கான இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டு தவறான செய்திகளுடன் பரவி வருகின்றது .


டிஜிட்டல் கலைஞர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் பங்கு பெற்ற புகைப்படங்களை அந்த தளத்தில் பதிவிட்டுள்ளனர் . 2002 ஆண்டு archaeological anomalies 2 என்ற புதையுண்ட பொருள்களை எடுப்பது போன்ற கிராபிக்ஸ் புகைப்படங்களுக்கான ஓர் போட்டி நடத்தப்பட்டது . அலியாஸ் இரோன்கிட்டி என்ற கலைஞர் உருவாக்கிய இந்த படம் அந்த போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தது .


கற்பனை திறமையை மையப்படுத்தி போலியான புதையுண்ட பொருள்கள் கிடைப்பது போல் உருவாக்கப்படவேண்டும் என்று போட்டி நிகழ்ந்துள்ளது . இதில் யாரும் தங்கள் உண்மையான பெயரை உபயோகிக்கவில்லை . இந்த படங்கள் உலகம் முழுவதும் இணையத்தின் மூலம் சென்றுள்ளது .


பல வருடங்களாக இது போன்ற படங்களை பயன்படுத்தி ராட்சசர்களின் எலும்பு கூடுகள் கிடைத்துள்ளன என்று செய்திகளை விடாமல் பரப்பி வருகின்றன . சிறுவயதில் இருந்து நாம் கேட்டறிந்த பல புராண கதைகளில் வருகின்ற அரக்கர்கள் , மிகப்பெரிய உருவம் கொண்டவர்கள் போன்ற கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக இந்த படங்கள் உள்ளது .


எனவே கற்பனைக்கு ஏற்றார் போல் உள்ளதால் இரண்டையும் தொடர்புப்படுத்தி வதந்திகளை பரப்புகின்றன . குஜராத்தில் தோண்டி எடுக்கப்பட்டது என்று கூறியது போல் பல நாடுகளில் பல கதைகளாக இந்த படங்கள் வளம் வருகின்றன .

சுருக்கமாக

இப்படங்கள்  worth 1000 என்ற கிராபிக்ஸ் படங்களுக்கான இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க