YouTurn

பிளாஸ்டிக் பைகள் இனி தேவையில்லை, மாற்று பைகளை கண்டுப்பிடித்த இளைஞர்.

பிளாஸ்டிக் பைகள் இனி தேவையில்லை, மாற்று பைகளை கண்டுப்பிடித்த இளைஞர்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

திருப்பூரை பூர்வீகமாக கொண்ட 26 வயதான திரு. சிபி செல்வன் என்ற இளைஞர் அமரிக்காவில் தான் பணிபுரிந்து வந்த வேலையை விடுத்து பெங்களூரில் “ ரிஜெனோ ” ( Regeno bags ) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தன் நிறுவனத்தின் மூலம் நீரில் எளிதில் கரையக்கூடிய பைகளை தயாரித்து வருகிறார். இந்த பைகள் மக்காச்சோளம்...

பரவிய செய்தி

திருப்பூரைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் சிபி செல்வன் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு எளிதில் மட்கக்கூடிய பைகளை தயாரித்து வருகிறார்.

விரிவான விளக்கம்

திருப்பூரை பூர்வீகமாக கொண்ட 26 வயதான திரு. சிபி செல்வன் என்ற இளைஞர் அமரிக்காவில் தான் பணிபுரிந்து வந்த வேலையை விடுத்து பெங்களூரில் “ ரிஜெனோ ”  ( Regeno bags ) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தன் நிறுவனத்தின் மூலம் நீரில் எளிதில் கரையக்கூடிய பைகளை தயாரித்து வருகிறார்.



இந்த பைகள் மக்காச்சோளம் மற்றும் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முழுவதும் இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படும் இப்பைகளால் இயற்கைகோ, விலங்குகளுக்கோ எத்தகைய தீங்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

“ இத்தகைய பைகள் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கோவை மாநகராட்சியும் இப்பைகளை அறிமுகம் செய்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக வெள்ளை துணிப் பைகள், சில பைகள் சந்தைக்கு அதிகளவில் வருகின்றன. இவை பிளாஸ்டிக் பைகளை விட ஆபத்தானது. மேலும், இவை 75% பிளாஸ்டிக்கை வைத்து தான் தயாரிக்கப்படுகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ” என்று சிபி செல்வன் கூறியுள்ளார்.



இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் இப்பைகள் மூன்றே மாதத்தில் மட்கி விடும், எளிதாக நீரில் கரைந்து விடும் தன்மை கொண்டவை. தவறுதலாக அந்த நீரைக் குடித்தாலும், உடல்நலம் பாதிக்கப்படாது. மேலும், தீப்பற்றி எரியும்போது பிளாஸ்டிக் பைகள் உருகுவது போன்று அல்லாமல், இந்த பைகள் சாம்பலாகிவிடும் ” .

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக வந்த இப்பைகளின் விலை சற்று அதிகம் தான். ஒரு பையின் விலை 1 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

“ இயற்கையின் தோழன் என்விகிரீன் பைகள் ”

சிபி செல்வன் போன்றே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி மங்களூரை சேர்ந்தவர் பைகளை தயாரித்து, விற்பனையும் செய்து வருகிறார். அஷ்வத் ஹெக்டே என்பவர் மங்களூரில் 60 பேர் கொண்ட குழுவை வைத்து ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தயாரிக்கும் என்விகிரீன் பைகள் (envigreen.in) முழுவதும் சோளம், தாவர எண்ணெய் போன்ற இயற்கைப் பொருட்களால் ஆனவை.



இவையும் நீரில் கரையும் தன்மை கொண்டவை, 180 நாட்களில் எளிதில் மட்கக் கூடியவை. ஒவ்வொரு மாதமும் 1,000 மெட்ரிக் டன் பைகளை உற்பத்தி செய்து வருகிறார். இத்தகைய பைகளின் விலையானது பிளாஸ்டிக் பைகளை விட 35 சதவீதம் அதிகமாகவும், துணிப் பைகளை விட 500 மடங்கு குறைவானதும் ஆகும்.

சுருக்கமாக

அமெரிக்காவில் தனது பணியைத் துறந்து இந்தியா வந்த சிபி செல்வன், நீரில் கரையும் தன்மை கொண்ட பைகளை இயற்கைப் பொருட்களை கொண்டு தயாரித்து உள்ளார். தற்போது தமிழகத்தில் முதன் முறையாக இப்பைகளை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க