YouTurn

பில் கேட்சை பின்னுக்கு தள்ளினாரா அமேசான் நிறுவனர் ஜெப்ப் ?

பில் கேட்சை பின்னுக்கு தள்ளினாரா அமேசான் நிறுவனர் ஜெப்ப் ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஒ ஜெப்ப் பெஸாஸ் ஜூலை 27 தேதி அன்று உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் . இவரின் சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்படுகின்றன . இதனால் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த பில் கேட்சை பின்னுக்கு தள்ளி உள்ளார் பெஸாஸ் ...

பரவிய செய்தி

பில் கேட்சை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய பணக்காரராக மாறினார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப்ப் பெஸாஸ் .

விரிவான விளக்கம்

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஒ ஜெப்ப் பெஸாஸ் ஜூலை 27 தேதி அன்று உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் . இவரின் சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்படுகின்றன .


இதனால் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த  பில் கேட்சை பின்னுக்கு தள்ளி உள்ளார் பெஸாஸ் . அன்றைய நாளின் இறுதியில் அமேசான் நிறுவனத்தின் வர்த்தக பங்குகள் மதிப்பு 90.6 பில்லியன் டாலர்களாகவும் , பில்கேட்ஸின் வர்த்தக பங்குகள் மதிப்பு 90 பில்லியன் டாலர்களாகவும் இருந்தன .


இதனை ப்ளூம்பர்க் மற்றும் போர்ப்ஸ் தெரிவித்தது . வியாழக்கிழமை அன்று அமேசான் பங்குகள் 1.6% உயர தொடங்கியதால் பெஸாஸ் சொத்து மதிப்பு  1.7 பில்லியன் டாலர்கள் அதிகரித்தது . பங்குகள் உயர்ந்ததால் அமேசான் நிறுவனத்தின் தலைவர் பெஸாஸ் சிறிது நேரத்திற்கு முதலிடத்தை பிடித்தார் . ஆனால் சில மணி நேரத்தில் அமேசானின் பங்குகள் சரிய தொடங்கியதால் பில்கேட்ஸ் மறுபடியும் முதல் இடத்திற்கு முன்னேறினார் .


சிலமணி நேரத்திற்காவது பெஸாஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருந்துள்ளார் . அவரின் அதிர்ஷ்டத்தை பொறுத்தவரை அமேசான் பங்குகளில் பிணைக்கப்படுள்ளார் . இந்த வாரம் E-commerce juggernaut இன் சந்தை மதிப்பு முதல் முறையாக $500 பில்லியனை தாண்டியது , இவரின் பங்கு மட்டும் 17% ஆகும் .


அமேசானின் வளர்ந்து வரும் பங்குகளின் காரணமாக அவர் கூடிய விரைவில் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக மாறுவதில் சந்தேகம் இல்லை . இருப்பினும், உலகின் பணக்காரர்களில் பட்டியலில் யாரும் நிரந்தரமாக முதல் இடத்தில் இருக்க போவதில்லை .

சுருக்கமாக

உலகின் நம்பர் 1 பணக்காரன் என்ற பட்டம் நிலையானது அல்ல.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க