YouTurn

பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அறிவிப்பு.

பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அறிவிப்பு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்ந்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், 2017 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர்...

பரவிய செய்தி

தமிழக அரசின் 2017 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்ந்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

அதில், 2018 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது முனைவர் கோ.பெரியண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது டாக்டர் சகோ.ஜார்ஜ் ஜே.கே க்கு வழங்கப்பட உள்ளது.



இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் வருகின்ற 16-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். விருது பெறுவோர்க்கு ஒரு லட்ச ரூபாய்கான காசோலையும், ஒரு சவரன் தங்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி சிறப்பிப்பார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க