YouTurn

பாண்டிச்சேரி மீனவர்கள் பிடித்த அபூர்வமான மீனா ?

பாண்டிச்சேரி மீனவர்கள் பிடித்த அபூர்வமான மீனா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில், மனித உடலமைப்பு கொண்ட ஓர் அபூர்வமான மீனின் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரப்பெட்டியில் வைக்கப்படிருப்பது போன்று எடுக்கப்பட்ட வீடியோவானது அதிகளவில் வைரலாகியது. மேலும், அந்த அபூர்வமான மீன் பாண்டிச்சேரி மீனவர்களால் பிடிக்கப்பட்டது என்று...

பரவிய செய்தி

பாண்டிச்சேரி மீனவர்கள் ஓர் அபூர்வமான மீனைக் கடலில் பிடித்துள்ளனர். பிடிபட்ட அம்மீனின் தலை மற்றும் வால் பகுதி மட்டுமே மீன் போன்று உள்ளது. ஆனால், தலைக்கும், வாலுக்கும் இடைப்பட்ட உடலமைப்பானது மனிதரின் உடல் போன்று அமைந்துள்ளது. மேலும், பிடிபட்ட மீனின் கைகளை பின்புறமாகக் கட்டிக் காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை அதிகம் பகிரவும்.

விரிவான விளக்கம்

சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில், மனித உடலமைப்பு கொண்ட ஓர் அபூர்வமான மீனின் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரப்பெட்டியில் வைக்கப்படிருப்பது போன்று எடுக்கப்பட்ட வீடியோவானது அதிகளவில் வைரலாகியது. மேலும், அந்த அபூர்வமான மீன் பாண்டிச்சேரி மீனவர்களால் பிடிக்கப்பட்டது என்று செய்திகளும் பரவி வருகின்றன.

எனினும், அதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும், இது தொடர்பான செய்திகள் செய்திதாள்கள் மற்றும் ஊடகங்களிலும் வெளிவரவும் இல்லை. ஆனால், இந்த மீன் பற்றிய தகவல்கள் டிசம்பர் 9-ம் தேதி மியான்மர் நாட்டின் “ குளோபல் சின் போஸ்ட் ” வலைதளத்தில் வெளியாகியுள்ளது.



மியான்மர் நாட்டின் வடதெற்கே சுமார் 2170 கி.மீ நீளமுடைய ஐராவதி ஆறு உள்ளது. இந்த ஆறு அந்நாட்டின் மிக முதன்மையான வணிக நீர்வழித் தடமாக உள்ளது. இத்தகைய வணிகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூர்வமான தோற்றம் கொண்ட மீனின் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அந்த மீனின் தலை மற்றும் வால் பகுதியானது மீனின் தோற்றத்தில் இருக்கும், ஆனால் உடலின் மத்தியப் பகுதி மட்டும் மனிதரைப் போன்று கைகள், மார்பு, தொப்பை போன்ற வயிறு என்று அமைத்துள்ளார்.

இந்த அபூர்வமான மீனின் தோற்றம் உண்மையானது போன்று காட்சியளிப்பதற்காக சிலிக்கானைப் பயன்படுத்தி உள்ளார். சிலிக்கானைப் பயன்படுத்தி தத்ரூபமாக அமைத்ததோடு, அதனுள் இயந்திர மோட்டார்களையும் பொருத்தியுள்ளார். உண்மையான மீன் போன்று அசைவுகளைக் கொடுக்க இவ்வாறு வடிவமைத்துள்ளார். ஆதலால், மீன் வைக்கபட்டிருந்த மரப்பெட்டியின் கீழே பார்த்தால் மோட்டார்க்கு செல்லும் வயரைக் காணலாம்.

மேலும், இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் மியான்மர் நாட்டின் மொழியில் உள்ள வலைதளங்களில் மட்டுமே அதிகளவில் வெளியாகியுள்ளன. பிற மொழிகளில் வெளியாகாதக் காரணத்தினால் தவறான செய்திகளுடன் பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க