YouTurn

பள்ளி குழந்தைகள் காணாமல் பற்றி வரும் செய்திகள் வதந்தியா ?

பள்ளி குழந்தைகள் காணாமல் பற்றி வரும் செய்திகள் வதந்தியா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சமூக வலைதளங்களில் குழந்தையை காணவில்லை என்று வரும் பல பதிவுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தவை ஆகும். சில சமயங்களில் காணாமல் போன குழந்தையை மீட்கப்பட்ட பிறகும் அக்குழந்தை பற்றிய செய்திகள் பரவிய வண்ணமே உள்ளன. அப்படங்கள் சில உண்மையானவை, பல போலியானவை ஆகும். அவற்றில் ஒன்று தான் இப்படங்களும். வேலூரில்...

பரவிய செய்தி

வேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி மாணவி எங்களிடம் இருக்கிறாள் , இதை அணைவரும் பகிரவும் .

விரிவான விளக்கம்

சமூக வலைதளங்களில் குழந்தையை காணவில்லை என்று வரும் பல பதிவுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தவை ஆகும். சில சமயங்களில் காணாமல் போன குழந்தையை மீட்கப்பட்ட பிறகும் அக்குழந்தை பற்றிய செய்திகள் பரவிய வண்ணமே உள்ளன. அப்படங்கள் சில உண்மையானவை, பல போலியானவை ஆகும். அவற்றில் ஒன்று தான் இப்படங்களும்.


வேலூரில் இருந்து சுற்றுலா வந்த 5 வயது காயத்ரி என்ற அரசு பள்ளி மாணவி எங்களிடம் இருக்கிறாள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியுள்ளது . இந்த ஒரே செய்தியை வைத்து பல குழந்தைகளின் புகைப்படத்தை மற்றும் மட்டும் மாற்றி ஒரு தவறான செய்தியை பரப்பப்படுகின்றன .


கேவலம் ஒரு விளம்பரத்திற்காக ஒரு சிலர் இத்தகைய செயலை செய்கின்றன . இதுபோன்ற வதந்திகளால் நாம் உண்மையான செய்திகளை கூட கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுவோம் . தவறான செய்திகளை பரப்ப எத்தகையோ செய்திகள் உள்ளன .


இணையத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு என்ற பெயரில் அதிகமான படங்கள் பகிரப்படுகின்றன . இவற்றில் பெரும்பாலனவை முற்றிலும் தவறான வதந்திகளே . ஆனால் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விசயத்தில் இத்தகைய வதந்திகளை பரப்பவேண்டாம் . உண்மையாக குழந்தைகளை இழந்தவர்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். உதவ இயலவில்லை என்றாலும் பரவாயில்லை தவறான செய்தியை பரப்பாதீர்கள் .

சுருக்கமாக

இது என்ன ஆச்சரியம் காணாமல் போன அனைத்து குழந்தைக்கும் ஒரே பெயர் ஒரே வயது .....
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க