YouTurn

பணக்காரக் கட்சிகளின் பட்டியலில் பா.ஜ.க முதலிடம்.

பணக்காரக் கட்சிகளின் பட்டியலில் பா.ஜ.க முதலிடம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அளிக்கும் நிதிநிலை அறிக்கை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, சென்ற 2015-2016-ம் நிதியாண்டிற்கான அரசியல் கட்சிகளின் சொத்து மற்றும் பொறுப்புகள் குறித்த ஜனநாயக சீர்திருத்த சங்கம்(ஏடிஆர்) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கட்சிகளின் சொத்து...

பரவிய செய்தி

இந்தியாவின் பணக்காரக் கட்சிகளின் பட்டியலில் பா.ஜ.க ரூ893 கோடியுடன் முதல் இடம். காங்கிரஸ் ரூ758 கோடியுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

விரிவான விளக்கம்

 இந்திய தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அளிக்கும் நிதிநிலை அறிக்கை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, சென்ற 2015-2016-ம் நிதியாண்டிற்கான அரசியல் கட்சிகளின் சொத்து மற்றும் பொறுப்புகள் குறித்த ஜனநாயக சீர்திருத்த சங்கம்(ஏடிஆர்) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் உள்ள கட்சிகளின் சொத்து மதிப்பு பற்றி வெளியிட்ட இந்த அறிக்கையில், ஏழு தேசிய கட்சிகளில் பா.ஜ.க முதல் இடத்தையும், இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 2004-2005-ம் நிதியாண்டில் பா.ஜ.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து மதிப்பானது ரூ122 கோடியே 93 லட்சம் ஆகும். ஆனால் தற்போதைய 2015-2016-ம் நிதியாண்டில் பா.ஜ.க-வின் சொத்து மதிப்பானது ரூ893 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸின் சொத்து மதிப்பானது 2004-2005-ம் நிதியாண்டில் ரூ167.35 கோடியாகவும், 2015-2016-ம் நிதியாண்டில் ரூ758.79 கோடியாகவும் அதிகரித்துள்ளது.


                                                                  


கடந்த 11 ஆண்டுகளில், பா.ஜ.க-வின் சொத்து மதிப்பானது 627 சதவீதம் அதிகரித்துள்ளது. 2004-2005 ஆம் ஆண்டில் ரூ108.63 கோடியாக இருந்த பா.ஜ.க கட்சியின் மூலதனம் மற்றும் இருப்பு தொகையானது தற்போது ரூ886.889 கோடியாக அதிகரித்துள்ளது.   கடன் மற்றும் பொறுப்புகளை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு சதவீதம் கடந்த 11 ஆண்டுகளில் மிக அதிகமாக 4000 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி அடைந்துள்ளது.


இவ்விரு கட்சிகளும் சில ஆண்டுகளில் மிக வேகமாகவும், சில ஆண்டுகளில் குறைவாகவும் வளர்ச்சியடைந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற ஒரு சில தேசிய கட்சிகளின் சொத்துக்கள் மட்டுமே நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்து மதிப்பு ரூ90.55 கோடியில் இருந்து ரூ437.78 கோடியாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மதிப்பு ரூ0.25 கோடியிலிருந்து ரூ44.99 கோடியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.




கடந்த 11 ஆண்டுகளில் தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பானது பல மடங்கு அதிகரித்துள்ளதை இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

சுருக்கமாக

2004-2005 நிதியாண்டில் ரூ122 கோடியே 93 லட்சமாக இருந்த பா.ஜ.க-வின் சொத்து மதிப்பு 2015-2016 நிதியாண்டில் ரூ893 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க