YouTurn

நேதாஜியை போர் குற்றவாளி என கூறும் நேருவின் கடிதம், உண்மை என்ன?

நேதாஜியை போர் குற்றவாளி என கூறும் நேருவின் கடிதம், உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்களுள் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பல ஆண்டுகளாக நேதாஜியின் மரணம் பற்றியும், அவரை பற்றிய ஆவணங்கள் ஏதும் வெளியிடாமல் இருந்து வந்தனர். இன்று வரை அவரின் மரணம் தொடர்பாக பல்வேறு கற்பனை கதைகள் கூறப்படுகிறது. இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு...

பரவிய செய்தி

பிரிட்டன் அரசுக்கு நேரு எழுதிய கடிதத்தில் நேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார்.

விரிவான விளக்கம்

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்களுள் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பல ஆண்டுகளாக நேதாஜியின் மரணம் பற்றியும், அவரை பற்றிய ஆவணங்கள் ஏதும் வெளியிடாமல் இருந்து வந்தனர். இன்று வரை அவரின் மரணம் தொடர்பாக பல்வேறு கற்பனை கதைகள் கூறப்படுகிறது.



இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு நேதாஜியின் 120-வது பிறந்தநாள் அன்று, நேதாஜி குறித்து தடை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

அவ்வாறு வெளியிடப்பட்ட ஆவணங்களில் 1945-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிரிட்டன் அரசுக்கு எழுதிய கடித்தில், நேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார் என்று சர்ச்சைகள் கிளம்பின.

டிசம்பர் 26, 1945-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமரான கிளெமென்ட் அட்லீக்கு எழுதப்பட்ட கடிதத்தில், “உங்களின் போர் குற்றவாளி “சுபாஷ் சந்திர போஸ்” ரஷ்யாவிற்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார். ரஷ்யா எப்பொழுதும் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் ” என்று எழுதப்பட்டிருக்கும்.

இது குறித்து மிகச்சிறந்த இந்திய வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா கூறுகையில், "இக்கடிதங்கள் இந்திய சமூக வலைதளங்களில் அதிகம் பரவுவதற்கு முன்பு வரை போலியானவையா என்று உறுதி செய்ய முடியவில்லை”என்று கூறியிருந்தார்.



நேருவின் கடிதம் என்று சர்ச்சையை ஏற்படுத்திய கடிதத்தில் இருக்கும் பல்வேறு தவறுகள்:

  • கிளெமென்ட் அட்லீ 1945-ல் பிரிட்டன் அரசின் பிரதமர், இங்கிலாந்து இல்லை.

  • பிரிட்டிஷ் பிரதமர் அதிகாரப்பூர்வ அலுவலகம் 10, Down street  இல்லை, 10, Downing street ஆகும்.

  • ஜோசப் ஸ்டாலின் ஒன்றிணைந்த சோவியத் யூனியனின் (USSR) தலைவர், ரஷ்யா அல்ல.

  • 1945-ல் சோவியத் யூனியனிடம், பிரிட்டிஷ் அல்லது அமெரிக்காவுக்கு நட்புறவு இல்லை.


அக்கடிதத்தில் நேருவின் கையொப்பம் இல்லாமல், பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அக்கடிதத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

மறைந்த இந்திய பிரதமர் நேரு பிரிட்டன் அரசுக்கு நேதாஜி குறித்து தவறாக எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலியானவை என்று காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
நேதாஜி பற்றி உண்மை நிலை , அவர் மீது நேரு நிலைப்பாடு என்ன என பல சந்தேகம் இருந்தாலும் , இந்த கடிதம் போலியானது.

சுருக்கமாக

நேதாஜி பற்றி தவறாக குறிப்பிட்டிருப்பதாகப் பரவும் நேருவின் கடிதம் போலியானது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க