YouTurn

நீட் தேர்விற்கு சுந்தர் பிச்சை எதிர்ப்பு தெரிவித்தாரா ?

நீட் தேர்விற்கு சுந்தர் பிச்சை எதிர்ப்பு தெரிவித்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்று கூகுளின் CEO சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசுப் பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று...

பரவிய செய்தி

நீட் தேர்வானது என்னைப் போன்ற ஏழைக் குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு எதிரானது என்று கூகுளின் CEO சுந்தர் பிச்சை கருத்துத் தெரிவித்துள்ளார்.

விரிவான விளக்கம்

நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்று கூகுளின் CEO சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


  அரசுப் பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நேரத்தில் கூகுளின் CEO சுந்தர் பிச்சை அவர்கள் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று சில செய்திகள் சமூக வலைதளங்களில் காணப்படுகிறது.


 அதில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் வலியை பகிர்ந்துக் கொள்ள முடிகிறது. உண்மையில் நீட் தேர்வு சாதாரண மக்களுக்கு எதிரானதாகவும், அவர்களின் திறமையை அழிக்கும் செயலாகவும் உள்ளது. நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொண்டிருந்தால் நான் இன்று கூகுளின் CEO என்ற நிலைக்கு வந்திருக்க இயலாது. என்னால் உறுதியாக கூற முடியும், நீட் போன்றவை நவீன உலகத்தில் ஏமாற்றும் செயலாகும். இவை மாணவர்களை இழிவுபடுத்தும் ஒன்றாகும். ஏனெனில், மாணவர்களை தீவிரவாதிகள் அல்லவே ! என்று இருந்தது.


   நீட் பற்றி எந்தவொரு கருத்தையும் சுந்தர் பிச்சை அவர்கள் கூறவில்லை. ஆனால், அவரது பெயரை பயன்படுத்தி வதந்தியை பரவியுள்ளனர் என்று மட்டும் தெரிகிறது. காரணம், அவர் ஒரு தமிழன் என்ற ஒற்றை வார்த்தையே. தமிழன் என்று பெருமைப்படுவதற்கு இம்மண்ணில் பிறந்து சாதித்தால் மட்டும் போதுமா. தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றிக்கு கூட அவர் கருத்துக் கூறியதாக தெரியவில்லை. ஆனால், அவரின் பெயரை வைத்தே செய்திகளைப் பரவி வருகின்றனர். இவ்வாறு செய்வதால் நமக்கு தானே இழிவு. போராடி தான் வெற்றி பெற வேண்டுமே தவிர வதந்தியைப் பரப்பி அல்ல.

சுருக்கமாக

கூகுளின் CEO சுந்தர் பிச்சை அவர்கள் நீட் தேர்வுத் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க