
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நீட் தேர்வு முறையில் தமிழகத்தின் அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கப் போவதாக வந்த செய்தி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்ட பிறகு சென்ற ஆண்டு மட்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நீட் தேர்வு முறையில் தமிழகத்தின் அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கப் போவதாக வந்த செய்தி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்ட பிறகு சென்ற ஆண்டு மட்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு நீட் தேர்வு நடைபெறாது என்றும் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும் என்று மாநில அரசுக் கூறி வந்த வேளையில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் தோல்வியுற்ற அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துக் கொண்டார். அதனால் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தாண்டில் நீட் தேர்வு முறையில் தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் ஐந்து பேர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கப் போவதாக மருத்துவக் கல்வி இயக்கத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அரசுப் பள்ளி சென்ற ஆண்டில் 38 பேரும், 2015 ஆம் ஆண்டில் 34 பேருக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இந்தாண்டில் ஐந்து என்ற சொற்ப இடங்களே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திருப்பது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 3534 மருத்துவ இடங்களுக்கு, மாநிலப் பாடத்திடத்தில் பயின்ற 2314 பேர்களும், இதரப் பாடத்திட்டத்தில் பயின்ற 1220 பேர்களும் நீட் முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று தேர்ச்சிப் பெற்றவர்களில் ஐந்து பேர்கள் மட்டுமே. அதாவது 0.14 என்ற அளவில் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிமாநிலத்தில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள், தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்கள், சி.பி.எஸ்.இ யில் பயின்றவர்கள், பெரு நகரங்களை சேர்ந்தவர்கள் ஆகியோரே அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். எனவே கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவத்தில் வாய்ப்புகள் கிடைக்கப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. இவை அனைத்திற்கும் காரணம் இந்த ஆண்டும் நீட்டுக்கு விலக்கு வாங்கி விடலாம் என்ற மாநில அரசின் தவறான நம்பிக்கையும், மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்யாததும் தான்.