YouTurn

தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் லைட் எரிகிறது.

தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் லைட் எரிகிறது.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் லோனார் என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது . அந்த வாக்குச்சாவடியில் தேங்காய் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க தாமரை சின்னத்தில் விளக்கு எரிந்துள்ளது . தொடர்ந்து இதே போல் பலர் வாக்கு செலுத்தும் போதும் இவ்வாறு...

பரவிய செய்தி

தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தால் தாமரை சின்னத்தில் லைட் எரிகின்றது என்று ஆர்.டி.ஐ யில் அதிர்ச்சி .

விரிவான விளக்கம்

  மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் லோனார் என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது . அந்த வாக்குச்சாவடியில் தேங்காய் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க தாமரை சின்னத்தில் விளக்கு எரிந்துள்ளது .


தொடர்ந்து இதே போல் பலர் வாக்கு செலுத்தும் போதும் இவ்வாறு நிகழ்ந்ததை அடுத்து அங்கு போட்டியிட்ட வேட்பாளர் அருண் சார்ஸ் ஓட்டு இயந்திரத்தில் உள்ள தவறை ஆதாரத்துடன் புல்தான மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார் .


அதன்பின் மாவட்ட கலெக்டர் தேர்தல் ஆணையரிடம் தொடர்புகொண்டு  தேர்தலை நிறுத்தி உள்ளனர் . இயந்திரத்தில் எற்பட்ட கோளாறுக் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்படுவதாக அறிவித்து , ஓட்டு இயந்திரங்களை சீல் செய்தனர் . மற்ற வேட்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க ஐந்து நாட்களுக்கு பிறகு மறுதேர்தலை நடத்தினர் . இதுபோல் இனி நடக்காது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர் .


வாங்கு இயந்திரங்களை சோதனையில் மேற்கொண்டு ஓட்டு இயந்திரத்தில் தவறுகள் நடந்துள்ளது என்றும் ஜூன் மாதம் விசாரணை நடக்கும் என்றும் ஆர்.டி.ஐ யில் வெளிப்படுத்தியுள்ளனர் . இதுபற்றிய தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிந்து கொள்ளலாம் .


ஓட்டு சீட்டில் முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறி தானே நவீன முறையில் வாங்கு இயந்திரங்களை கொண்டு வந்தனர் . இப்பொழுது அதில் கூட முறைகேடுகளா . மக்களின் நம்பிக்கை என்னும் வாக்கை பெற தகுதி இல்லாதவர்கள் இதுபோல் செயலை செய்யலாம் .


அன்று வாக்கு பெட்டிகளை தூக்கினார்கள் இன்று நவீன முறையில் வாங்குகளை தூக்குகிறார்கள் .

சுருக்கமாக

ஆம் , டிஜிட்டல்  இந்தியா என்றால் சும்மாவா !!!

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க