YouTurn

தெலங்கானா விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்.

தெலங்கானா விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவின் 29-வது மாநிலமாக உருவாகிய தெலங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அம்மாநில அரசு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்துள்ளது. இதனால், விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் 23 லட்சம் பம்பு செட்டுகளை இயக்க இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. டிசம்பர் 31-ம் தேதி...

பரவிய செய்தி

தெலங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

விரிவான விளக்கம்

இந்தியாவின் 29-வது மாநிலமாக உருவாகிய தெலங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அம்மாநில அரசு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்துள்ளது. இதனால், விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் 23 லட்சம் பம்பு செட்டுகளை இயக்க இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.



டிசம்பர் 31-ம் தேதி தெலங்கானா முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ தெலங்கானா அரசு புத்தாண்டின் பரிசாக இனி 24X7 நாட்களும் விவசாயத்திற்காக இலவச மின்சாரம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார் ”.

இத்திட்டத்தை தெலங்கானா மாநிலம் மெட்சல் கல்காஜ்கிரி மாவட்டத்தில் ஷமீர் பேட்டையில், மாநில மின் விநியோகத் திட்ட அதிகாரி ரகுமா ரெட்டி நள்ளிரவு 12.01 மணியளவில் தொடங்கி வைத்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கே.சந்திரசேகர ராவ், "  தெலங்கானாவில் மின்பற்றாக்குறை என்னும் நிலை மாறி தற்போது தன்னிறைவை எட்டியுள்ளோம். எனவே, தெலங்கானா மாநிலத்தின் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விவசாய இலவச மின் திட்டத்திற்காக மின் விநியோக கட்டமைப்புகளை மேம்படுத்த ரூபாய் 12,316 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது ".

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் விவசாயத்திற்கு சில மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, மேலும், சில மாநிலங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டாலும், அதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தெலங்கானாவில் மட்டும் தான் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் தடையில்லா இலவச மின்சாரம் வழங்குவதாகக் கூறியுள்ளார். நாட்டின் தனிநபர் மின்நுகர்வு 1,200 யூனிட்டாகவும், தெலங்கானாவைப் பொறுத்தவரை 1,505 யூனிட்டாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் ஆஃப் தெலங்கானா லிமிடெடின் தலைவர் டி.பிரபாகர் ராவ் கூறுகையில், ஜனவரி மாதத்தில் மட்டும் விவசாயத்திற்காக 9,500 மெகாவாட் தேவைப்படுகிறது. மேலும், மார்ச் மாதத்தில் மின் தேவையானது 11,000 மெகாவாட் என்ற அளவிற்கு அதிகரித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். நமது அனுப்பீடு மற்றும் விநியோகம் அமைப்பானது 17,000 மெகாவாட் வரை தாங்கி செல்லும் வல்லமை உடையது என்று கூறியுள்ளார்.



இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் தான் விவசாயத்திற்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் பம்பு செட்டுக்கான மின்சாரத்தை 1.9.1990 முதல் இலவசமாக வழங்குவதென்று, அன்றைய திமுக ஆட்சியில் 17.11.1990-ல் ஆணையிடப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு முன்னோடியாக தமிழகம் திகழ்ந்துள்ளது ".

விவசாயத்திற்காக இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை கொண்டு சிலர் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்தும் வருகின்றனர். எனவே அவற்றை தடுக்கும் பொருட்டு அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதும் அவசியமானதாகும்.

சுருக்கமாக

டிசம்பர் 31-ம் தேதியன்று நள்ளிரவில் தெலங்கானாவில் விவசாயத்திற்காக 24  மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் பம்பு செட்டுகளை இயக்க இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. எனினும், பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க