YouTurn

தாஜ்மஹாலில் விளக்குகள் இல்லாததற்கு காரணம் என்ன ?

தாஜ்மஹாலில் விளக்குகள் இல்லாததற்கு காரணம் என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தாஜ்மஹாலில் விளக்குகளே இல்லை. காரணம், ஒரு முறை இந்திய அரசாங்கம் தாஜ்மஹால் முழுவதும் விளக்குகளை பொருத்தியுள்ளனர். எனினும், அடுத்த நாள் அனைத்து விளக்குகளும் உடைக்கப்பட்டு , இங்கு மும்தாஜின் ஆன்மா உறங்குகின்றது என்று எழுதப்பட்டு இருந்தது . இதனால் தாஜ்மஹாலில் விளக்குகள் பொறுத்தாமல் உள்ளனர் என்று...

பரவிய செய்தி

உலக அதிசியமான தாஜ்மஹாலில் விளக்குகளே இல்லை தெரியுமா . ஒரு முறை அரசாங்கம் தாஜ்மஹால் முழுவதும் விளக்குகளை பொருத்தியுள்ளனர் ஆனால் அணைத்து விளக்குகளும் உடைக்கப்பட்டு , இங்கு மும்தாஜின் ஆன்மா உறங்குகின்றது என்று எழுதப்பட்டு இருந்தது . இதனால் விளக்குகள் பொறுத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர் .

விரிவான விளக்கம்

தாஜ்மஹாலில் விளக்குகளே இல்லை. காரணம், ஒரு முறை இந்திய அரசாங்கம் தாஜ்மஹால் முழுவதும் விளக்குகளை பொருத்தியுள்ளனர். எனினும், அடுத்த நாள் அனைத்து விளக்குகளும் உடைக்கப்பட்டு , இங்கு மும்தாஜின் ஆன்மா உறங்குகின்றது என்று எழுதப்பட்டு இருந்தது . இதனால் தாஜ்மஹாலில் விளக்குகள் பொறுத்தாமல் உள்ளனர் என்று சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டன.



இவர்கள் கூறுவது போல் விளக்குகள் பொருத்தாமல் இருப்பதற்கு காரணம் மும்தாஜின் ஆன்மா அல்ல பூச்சிகள் தான் உண்மையான காரணம் . ஆம் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுவதால் விளக்குகள் பொருத்தாமல் உள்ளனர் .


விளக்குகள் பொருத்தினால் பார்க்க அனைவரையும் கவரும்படி இருக்கும் ,  இரவு நேரத்தில் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் தாஜ்மஹாலின் சுவர்கள் , தரைப்பகுதி போன்ற ஒளிமிகுந்த பகுதியில் வந்து அமர்ந்து விடும் . அதன்பின் அவைகள் தன் எச்சங்களை அந்த பகுதிகளில் வெளியிடுகின்றன .


இதனால் தாஜ்மஹாலின் நிறத்தில் மாறுபாடுகள்  எற்பட வாய்ப்புள்ளதாக  கூறியுள்ளனர் . எனவே விளக்குகள் எதுவும் பொருத்தாமல் உள்ளனர் .  இவையே முக்கிய காரணம்  ஆகும் .  எனினும், சிறிது தொலைவில் சில விளக்குகள் அந்த பகுதியை சுற்றி உள்ளன .


தாஜ்மஹாலின் நிறத்தில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக செய்த செயலை மாற்றி உள்ளனர் இந்த இணைய வாசிகள் . வரலாற்று சிறப்புமிக்க இந்த அதிசயத்தின் அழகை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும் .

சுருக்கமாக

விளக்குகள் பொருத்தாமல் இருப்பது என்பதோ  உண்மைதான் , ஆனால் காரணம்  மும்தாஜ் ஆன்மா அல்ல பூச்சிகள் தான் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க