YouTurn

தமிழிசை பெற்ற விருது என்ன?

தமிழிசை பெற்ற விருது என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை காலூன்ற வைப்பதை தனது குறிக்கோளாக கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், 2017 ஆம் ஆண்டிற்காக சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருதினை தமிழக பாஜக...

பரவிய செய்தி

இந்திய அளவில் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.

விரிவான விளக்கம்

தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை காலூன்ற வைப்பதை தனது குறிக்கோளாக கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டிற்காக சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருதினை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கி கௌரவித்தது என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. எனினும், விருது வழங்கியவர்கள் உண்மையில் மனித உரிமை ஆணையமா ? என்ற கேள்விகளும் பலருக்கு எழுந்துள்ளது.

சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருது:

ஜனவரி 30 தேதியன்று சென்னையில் சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையத்தின் விழா நடைபெற்றது. இதில், தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு 2017-ம் ஆண்டின் சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருது வழங்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து, சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையத்தின் சர்வதேச தலைவர் டாக்டர் பெடிரிட்டோ மரியோ , சர்வதேச அமைதி தூதுவர் குவின் முன்னி, உதவித் தலைவர் ஆண்டனி பெர்னாண்டோஸ், பிவர்லி ஹில், அமெரிக்க மற்றும் இலங்கைக்கான தூதுவர் அல்வின் ரோலன்ட் திமோதி ஆகியோர் பாஜவின் தலைமை அலுவலகமான கமலாலயதிற்கு சென்றனர்.

அங்கு, தமிழிசை சௌந்தராஜனின் சிறந்த தலைமை பண்பை பாராட்டி 2017-ம் ஆண்டிற்காக சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருதினை வழங்கினர். அதன் பின்னர், மனித உரிமை அமைதி ஆணையக் குழுவினர் தமிழிசை சௌந்தரராஜனை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையம்:

சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையம் (IHRPC) அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த  உலகளாவிய மனிதநேய அமைப்பாகும். இந்த அமைப்பு ப்ளோரிடா மாகாணத்தின் அரசு சாரா அமைப்புகளில்(NGO) பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் நோக்கம், பொதுசேவை மற்றும் மனித உரிமை மூலம் உலக சமூக நீதி ஆகியவற்றை ஊக்குவிப்பது ஆகும்.



ஊடகங்களில் பரவிய செய்தி :

தமிழிசை சௌந்தரராஜனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 2017-ம் ஆண்டின் சிறந்த பொதுநல சேவைக்கான விருதினைப் பெற்றார் என்றே பதிவிடப்பட்டுள்ளது.



ஆனால், 2017-ம் ஆண்டின் சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருதினை, “ இந்தியாவின் சிறந்த பெண் அரசியல் தலைவர் மற்றும் சிறந்த பெண் தலைவர் ” என்ற தலைப்பாக மாறி செய்திகளிலும், வலைதள கருத்துகளும், மீம்களும் வெளியாகியது.

ஊடகங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது தவறான செய்திகள் என்று அறிந்தும் அதை நீக்காமல் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மறுப்பதிவு செய்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையம் என்ற அமைப்பால் பொது சேவைக்காக வழங்கப்பட்ட விருதை, “ இந்தியாவின் சிறந்த பெண் அரசியல் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ” என்று செய்திகள் வெளியாகி சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சுருக்கமாக

தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு 2017-ம் ஆண்டின் சிறந்த சேவை மற்றும் தலைமை பண்பிற்கான விருதினை அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமை அமைதி ஆணையம் என்ற அமைப்பு வழங்கி கௌரவித்தது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க