YouTurn

தமிழகத்தில் 55 சதவீதம் பெண்கள் இரத்தசோகையால் பாதிப்பு.

தமிழகத்தில் 55 சதவீதம் பெண்கள் இரத்தசோகையால் பாதிப்பு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

எந்திரங்கள் கூட தோற்றுப் போகும் எம் நாட்டுப் பெண்களின் சுறுசுறுப்பிற்கு என்று பெருமை கொள்ளும் அளவிற்கு போற்றப்பட வேண்டிய பெண்களே அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரம் ஊட்டச்சத்து...

பரவிய செய்தி

தமிழகத்தில் 55 சதவீதம் பெண்கள் இரத்தசோகைக் குறைபாட்டுடன் உள்ளனர். மேலும் 14 சதவீதம் பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர் என்று மத்திய அரசின் ஆய்வு கூறுகிறது.

விரிவான விளக்கம்

எந்திரங்கள் கூட தோற்றுப் போகும் எம் நாட்டுப் பெண்களின் சுறுசுறுப்பிற்கு என்று பெருமை கொள்ளும் அளவிற்கு போற்றப்பட வேண்டிய பெண்களே அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் ஆய்வு கூறுகிறது.


WOMEN BABY


   இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரம் ஊட்டச்சத்து வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கமே குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் வழிகாட்டுதல் போன்றவையே. சென்ற வருடம் மத்திய சுகாதார  குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குடும்ப சுகாதார மையத்தின் சார்பில் இந்திய அளவில் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் மாதிரி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 50 சதவீதம் பேர் இரத்தசோகைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


 மேலும், இந்த ஆய்வில், 22 சதவீத பெண்கள் சராசரியாக இருக்க வேண்டிய ஊட்டச்சத்தை விட குறைவான அளவில் ஊட்டச்சத்தை பெற்றுள்ளனர். பதினொன்று வயதுக்கு உட்பட்ட இந்திய குழந்தைகளில் 58 சதவீதம் பேர் இரத்தசோகைக் குறைபாடுடன் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.


 இரத்தசோகையானது, உடலுக்கு போதிய இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து இல்லாத போது ஏற்படும். இதனால் இரத்த நாளங்கள் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை எடுத்து செல்ல இயலாமல் போகும்போது உடலானது சோர்வாக காணப்படும். கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் இரத்தசோகையால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியையும் அது பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


                                                                       ஆரோக்கியமான உணவுகள்


   தமிழகத்தில் 55 சதவீத பெண்கள் இரத்தசோகை குறைபாடு உள்ளவர்கள் என்றும், 14 சதவீத பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் உள்ளனர் என்றும் ஆய்வில் கூறியுள்ளனர். இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடைய பெண்கள் தங்கள் குடும்பத்தை கவனிப்பதுடன், தங்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் பெண்கள் நல மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.


இயற்கை உணவுகளையும், நம் பாரம்பரிய உணவு முறையையும் கடைபிடித்தாலே அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடின்றி தேக ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

சுருக்கமாக

இந்திய அளவில் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட மாதிரிக் கணக்கெடுப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க