YouTurn

ட்ரம்ப் சவூதி செல்வதை 17 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளனரா ?

ட்ரம்ப் சவூதி செல்வதை 17 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளனரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் முன்கூட்டியே சிலரால் கணிக்கப்படுகிறது என்றும், அதை சிலரே தீர்மானிக்கின்றனர் என்றும் கூறி சில செய்திகள் நம்மை சுற்றி வலம் வருகின்றன. அவ்வாறு முன்கூட்டியே சொல்லப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று தான் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அரேபியா...

பரவிய செய்தி

17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “Simpson” கார்ட்டூன் தொடரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றி இடம்பெற்ற காட்சிகள். ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் சவூதி செல்வது வரை அன்றே கணித்துள்ளனர்.

விரிவான விளக்கம்

உலகில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் முன்கூட்டியே சிலரால் கணிக்கப்படுகிறது என்றும், அதை சிலரே தீர்மானிக்கின்றனர் என்றும் கூறி சில செய்திகள் நம்மை சுற்றி வலம் வருகின்றன.

அவ்வாறு முன்கூட்டியே சொல்லப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று தான் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அரேபியா சென்றது, அது பற்றிய பல நிகழ்வுகள் 17 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான “Simpson” என்ற கார்ட்டூன் தொடரில் தெளிவாக இடம்பெற்றதாகவும் கூறிய செய்திகள் இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. இவை அனைத்தும் ரகசியக் குழுக்களால் தீர்மானிக்கப்பட்டது என்று பலரும் நம்பி வருகின்றனர்.



“Simpson” என்ற கார்ட்டூன் தொடரானது பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்ட மிக நீண்ட கார்ட்டூன் தொடர் ஆகும். இத்தொடரானது வருங்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்வது இல்லை, முன்பு நடந்த நிகழ்வுகளை கேளிக்கையாக கார்ட்டூன் வடிவில் தொடராக வருபவை. தெளிவாக கூற வேண்டும் என்றால், 17 ஆண்டுகளுக்கு முன்பு “Simpson” கார்ட்டூன் தொடரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அரபி மன்னர் என்று மூன்று பேர் ஒரு உருண்டையை சுற்றி நின்று தொடும் படத்தை போன்று 2017-ல் நிகழ்ந்ததாகக் கூறுவது முற்றிலும் தவறு.



இப்படங்கள் மே 21, 2017-ல் சவூதியில் நடைபெற்ற  குளோபல் சென்டர் ஃபார் காம்படிங் எக்ஸ்ட்ரிமிஸ்ட் ஐடியோலாஜியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட அமரிக்க அதிபர் ட்ரம்ப், சவூதி மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ், எகிப்து அதிபர் அப்டெல் பாடாஹ் அல்-ஸிஸி ஆகியோர் எடுத்துக் கொண்டது. இதை கார்ட்டூன் படங்களாக மாற்றி மே 26, 2017-ல் youtube-ல் வெளியாகிய தொடரில் பயன்படுத்தியுள்ளனர். இப்படங்கள் சுவற்றில் இடம்பெறும் காட்சியை வீடியோவின் தொடக்கத்தில் 6 வது நொடியில் பார்க்கலாம்.

இத்தகைய கார்ட்டூன் படங்கள் இங்கு எவ்வாறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோல் அமெரிக்காவிலும் சர்ச்சையை உண்டாக்கின.

சுருக்கமாக

ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகிய பின்னர் மே 21, 2017-ல் சவுதி அரேபியா சென்றதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கார்ட்டூன் வீடியோவானது  மே 26, 2017-ல் youtube-ல் வெளியாகியது. அதில் இடம்பெற்ற படங்களை 17 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டது என்று வதந்தியை பரப்பியுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க