YouTurn

டொனால்டு ட்ரம்ப் அதிபரானது முன்கூட்டியே கணிக்கப்பட்டதா ?

டொனால்டு ட்ரம்ப் அதிபரானது முன்கூட்டியே கணிக்கப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

Fox Animated series-ன் The Simpsons கார்ட்டூன் தொடரில் வருங்காலத்தில் நடைபெற உள்ள பல நிகழ்வுகள் முன்பே நேர்த்தியாக கணிக்கப்பட்டு கூறப்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் அதன் படங்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது...

பரவிய செய்தி

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவர் வெற்றி பெற்ற பகுதிகளின் விவரங்கள் வரை அனைத்தும் 2000-ம் ஆண்டிலேயே Simpsons கார்ட்டூன் தொடரில் இடம்பெற்றுள்ளது.

விரிவான விளக்கம்

Fox Animated series-ன் The Simpsons கார்ட்டூன் தொடரில் வருங்காலத்தில் நடைபெற உள்ள பல நிகழ்வுகள் முன்பே நேர்த்தியாக கணிக்கப்பட்டு கூறப்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் அதன் படங்கள் வைரலாகி வருகிறது.



குறிப்பாக, அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது 2000-ம் ஆண்டிலேயே கணிக்கப்பட்டு விட்டதாகக் கூறி பரவி வருகிறது. மேலும், இதை தொடர்புப்படுத்தி வருடங்களை மட்டும் மாற்றி பல்வேறு மீம்கள் சமூக வலைதளங்களில் காணப்படுகிறது.















 ட்ரம்ப் அதிபர் ஆனது ஜனவரி 20, 2017         
 ட்ரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது  ஜூன் 15, 2015 
 simpsons  கார்ட்டூன் ஒளிபரப்பப்பட்டது ஜூலை 7, 2015

 

ஜூன் 15, 2015-ல் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கபட்டு நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் டவரில் உரையாற்றியதை 2000/2006 ஆண்டிலே கணிக்கபட்டதாகக் கூறுவது தவறு. கார்ட்டூன் வடிவில் ட்ரம்ப் உரையாற்றுவது தொடர்பான காட்சிகள் ஜூலை 7, 2015-ல் simpsons தொடரில் “ trumptastic voyage”  தலைப்பில் “அனிமேஷன் டோனிமேஷன் ” என்ற “youtube channel”-ல் வெளியானவை. அவற்றை பயன்படுத்தி வதந்தியை பரப்பியுள்ளனர்.



மேலும், அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பகுதிகளின் விவரங்கள் உள்ளடக்கிய “ எலெக்ட்ரோல் ” வரைபடமும் தவறானவையே ஆகும். முன்பே கணிக்கப்படதாகக் கூறும் வரைபடத்தில் விஸ்கான்சின், ஒஹியோ, பென்சில்வேனியா போன்ற பகுதிகள் நீள நிறத்தில் உள்ளன. ஆனால், உண்மையான வரைபடத்தில் அவை சிகப்பு நிறத்தில் உள்ளன. வெர்ஜினியா மாநிலம் சிகப்பாக தவறாகக் காண்பிக்கப்பட்டது. அவை 2016-ல் நீள நிறம் ஆகும். சிகப்பு நிறம் ட்ரம்ப் வெற்றி பெற்ற பகுதிகளை குறிக்கின்றது.

உலகில் நடைபெறும் நிகழ்வுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிலரால் கணிக்கப்பட்டு விட்டன, சிலரால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன என்றெல்லாம் கூறி சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

சுருக்கமாக

ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுவது ஜூன் 15, 2015-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. ஆனால், ட்ரம்ப் உரையாற்றுவது தொடர்பான காட்சிகள் Simpsons தொடரில் “ trumptastic voyage”  என்ற தலைப்பில் ஜூலை 7, 2015-ல் வெளிவந்தது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க