YouTurn

டெல்லியில் 40 வகையான அரசு சேவைகள் இனி வீடு தேடி வரும்.

டெல்லியில் 40 வகையான அரசு சேவைகள் இனி வீடு தேடி வரும்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

அரசுச் சான்றிதழ்கள் பெறுவதற்காக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு செல்லும் அரசு அலுவலங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியநிலை ஏற்படுவதாக தினந்தோறும் புகார்கள் வந்த வண்ணமே உள்ளன. இந்நிலையை சரி செய்யும்...

பரவிய செய்தி

டெல்லிவாசிகளுக்கு பெரிதும் பயன்படும் வகையில், அரசுச் சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட 40 வகையான சேவைகள் வீடு தேடி வரும் திட்டத்தை டெல்லி அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

விரிவான விளக்கம்

அரசுச் சான்றிதழ்கள் பெறுவதற்காக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு செல்லும் அரசு அலுவலங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியநிலை ஏற்படுவதாக தினந்தோறும் புகார்கள் வந்த வண்ணமே உள்ளன.


இந்நிலையை சரி செய்யும் நோக்கத்தில் டெல்லியின் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு 2018-ல் ஓர் புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது. “மொபைல் நண்பர் “ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் மற்றும் குடிநீர், வீடு வரி, மின்சாரக் கட்டணம் என 40 வகையான சேவைகள் வீடு தேடி வரும். டெல்லி மக்களின் வீட்டிற்கே வரும் அரசு அலுவலர் சான்றிதழ்களுக்கு தேவையான அசல் ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் படம் எடுத்துக் கொள்வார். இதற்கென பிரத்யேகமாக நகல்கள் அளிக்கத் தேவையில்லை.


 மேலும், “ மொபைல் நண்பர் “ சேவை மையத்திற்கு மக்கள் நேரடியாக தொலைபேசி வாயிலாக தேவைகளை தெரிவிக்கலாம். வீட்டிற்கு வரும் அரசு அலுவலரே தேவையான லேப்டாப், கேமரா உள்ளிட்ட அணைத்தும் எடுத்து வருவார். இத்திட்டம் குறித்த முடிவானது நவம்பர் 16-ம் டெல்லி அமைச்சரவையில் எடுக்கப்பட்டது.


இச்சேவையானது விடுமுறை நாட்களில் கூட கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, லஞ்சமும் ஒழிக்கப்படும். “ மொபைல் நண்பர் “ திட்டம் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரனமாக அமையும் என்று டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.


இச்சேவைகளை பெறுவதற்கென சிறிய தொகை சேவைக் கட்டணமாக பெறப்படும். அது அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும். மேலும், இந்த சேவையால் மக்களுக்கு கிடைக்கும் பலனைப் பொறுத்து கூடுதலாக 30 சேவையை இணைக்க உள்ளனர். குறிப்பாக, ரேஷன் பொருட்களையும் வீடுகளுக்கே சென்று வழங்குவது பற்றியும் விவாதித்து வருகின்றனர்.

சுருக்கமாக

நாட்டிலேயே முதல் முறையாக இந்த வித்தியாசமான திட்டத்தை டெல்லி மாநிலத்தின் ஆம் ஆத்மி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அரசு அலுவலங்களில் உள்ள அதிகாரிகளுக்கு மக்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை மாறும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க