YouTurn

ஜனவரி 14-ஐ பொங்கல் தினமாக அறிவித்தது அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா அரசு.

ஜனவரி 14-ஐ பொங்கல் தினமாக அறிவித்தது அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா அரசு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

அறுவடைத் திருவிழாவான ஜனவரி 14 உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் பொங்கல் தினமாகக் கொண்டாடி வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் பொங்கல் விழாவிற்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், 40,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் வசிக்கும் அமெரிக்காவின் விர்ஜீனியா...

பரவிய செய்தி

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாண அரசு ஜனவரி 14-ம் தேதியை பொங்கல் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விரிவான விளக்கம்

அறுவடைத் திருவிழாவான ஜனவரி 14 உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் பொங்கல் தினமாகக் கொண்டாடி வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் பொங்கல் விழாவிற்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், 40,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் வசிக்கும் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் அறுவடைத் திருவிழாவான பொங்கல் விழாவை கொண்டாடுவதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது.



பொங்கல் தினம் குறித்து விர்ஜீனியா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க சட்டசபை பிரதிநிதி டேவிட் புலோவா கடந்தாண்டு பிப்ரவரி 14-ல் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் 2018-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஒவ்வொரு வருடமும் விர்ஜீனியா மாகாணத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படுமென கூறப்பட்டுள்ளது. 

பொங்கல் விழாவிற்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்தது விர்ஜீனியாவில் வாழும் தமிழ் மக்களுடையே எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்கவில்லை என்றாலும், பொங்கல் பண்டிகை கொண்டாட விரும்பும் குழந்தைகள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

தீர்மானம் குறித்து உரையாற்றிய டேவிட் புலோவா, " 75 மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். ஜனவரி 14-ஐ பொங்கல் தினமாக அறிவித்ததன் மூலம், விர்ஜீனியாவில் வசிக்கும் தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிற மக்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்".



இதற்கு முன்பாக கனடாவில் ஜனவரி மாதம் தமிழர்கள் மாதமாக அறிவிக்கப்பட்டு பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் ஜியோர்ஜியா மாகாணத்தில் க்வின்நெட் கவுன்டி 2017 டிசம்பரை தமிழ் மொழி மாதமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும், பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் அங்குள்ள தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கலாச்சார திருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

சுருக்கமாக

பொங்கல் தினம் குறித்து விர்ஜீனியா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து வருகிற 2018-ம் ஆண்டிலிருந்து ஜனவரி 14 பொங்கல் விழாவாக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க