YouTurn

சோமனூர் விபத்தை விசாரிக்க விசாரணைக் குழு அமைப்பு.

சோமனூர் விபத்தை விசாரிக்க விசாரணைக் குழு அமைப்பு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

சோமனூரில் உள்ள பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே உள்ள சோமனூர் என்ற ஊரின் பேருந்து நிலையக் கட்டிடத்தின் மேற்கூரை செப்டம்பர் 7 ம் தேதி இடிந்து விழுந்தது. அதில், பேருந்து நிலையத்தில் இருந்த 20...

பரவிய செய்தி

சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்த விழுந்த விபத்தை விசாரிக்க மாநில அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

விரிவான விளக்கம்

சோமனூரில் உள்ள பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 கோவை அருகே உள்ள சோமனூர் என்ற ஊரின் பேருந்து நிலையக் கட்டிடத்தின் மேற்கூரை செப்டம்பர் 7 ம் தேதி இடிந்து விழுந்தது. அதில், பேருந்து நிலையத்தில் இருந்த 20 வயது கல்லூரி மாணவி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


  இரண்டு மாதங்களுக்கு முன்பே சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும், ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என்ற குற்றம்சாற்றியுள்ளனர். சோமனூர் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சிலர் கூறினர்.


  இத்தனை பெயரை பலிகொண்ட சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்த சம்பவம் மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தகுந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று பலர் கூறினர். இதை தொடர்ந்து சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்த விபத்தை விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங்க் பேடி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. காவல்துறையிடம் இருந்து விபத்து குறித்த ஆவணங்களையும், கட்டிடம் பற்றிய ஆவணங்களையும் ககன்தீப் சிங்க் பெற்றுள்ளார். மேலும் சம்பவம் நடந்த சோமனூர் பேருந்து நிலையத்தை நேரில் சென்று பார்க்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். விபத்து குறித்த விசாரணையின் அறிக்கை விரைவாக தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.


  சோமனூர் பேருந்து நிலையக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கருத்து.

சுருக்கமாக

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் தலைமையின் கீழ் விசாரணைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க