YouTurn

சுவிட்சர்லாந்து நாட்டின் வரவேற்பு பலகையில் 'தமிழ்'.

சுவிட்சர்லாந்து நாட்டின் வரவேற்பு பலகையில் 'தமிழ்'.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

சுவிட்சர்லாந்து நாட்டின் பேஸல் நகரில் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வரவேற்பு பலகையில் உலகின் பழமைவாய்ந்த மொழிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் பழமையான மொழியான தமிழ் மொழியில் “ நல்வரவு ” என்று எழுதப்பட்டுள்ளது ”. ஆகஸ்ட் 28, 2017-ல் CentrePoint Basel CH என்ற ட்விட்டர் பக்கத்தில், பேஸல் நகரை விட்டு...

பரவிய செய்தி

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வரவேற்பு பலகையில் “ நல்வரவு ” என்று தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

சுவிட்சர்லாந்து நாட்டின் பேஸல் நகரில் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வரவேற்பு பலகையில் உலகின் பழமைவாய்ந்த மொழிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் பழமையான மொழியான தமிழ் மொழியில் “ நல்வரவு ” என்று எழுதப்பட்டுள்ளது ”.



ஆகஸ்ட் 28, 2017-ல் CentrePoint Basel CH என்ற ட்விட்டர் பக்கத்தில், பேஸல் நகரை விட்டு செல்வதற்கு முன்பு “ WELCOME ON BOARD ”-ஐ பாருங்கள் என்று பதிவு செய்யப்பட்டது. அப்பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்திலும் தமிழை காணலாம்.

சுவிட்சர்லாந்தில் வரவேற்பு பலகை மட்டுமின்றி மொழிப் பெயர்ப்பு செய்யும் அலுவலகத்திலும் தமிழ் இடம் பெற்றுள்ளது. பேஸல் நகரில் உள்ள GGG Migration  என்ற சமுகநல அமைப்பு, வேலை நிமித்தமாக மற்றும் குடிபெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் மக்களுக்கு ஏற்படும் மொழி சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது மட்டுமின்றி மொழி பெயர்ப்பும் செய்து வருகிறார்கள்.



ஆங்கிலம், அரபி, தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் வேலை, குடியுரிமை, வருமானவரி, காப்புரிமை, வீடு, குடும்பம், கல்வி மற்றும் உடல்நலம் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கத்துடன் கூடிய பதில்கள் அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வரவேற்பு பலகையில் இந்திய மொழிகளில் தமிழ் மொழி மட்டும் இடம்பெற்றிப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் இடம்பெற்ற பெயர் பலகை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க