YouTurn

சுங்கசாவடியில் காத்திருந்தால் பணம் செலுத்த தேவையில்லையா ?

சுங்கசாவடியில் காத்திருந்தால் பணம் செலுத்த தேவையில்லையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களில் வரிசையில் காத்திருந்தால் சுங்கவரி கட்ட தேவை இல்லை என்பது வதந்தியே . சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவது பற்றி வந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை. மேலும், இது தொடர்பான எந்தவொரு அறிக்கையும் தாங்கள் வெளியிடவில்லை என்று...

பரவிய செய்தி

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களில் வரிசையில் காத்திருந்தால் சுங்கவரி கட்ட தேவை இல்லை .

விரிவான விளக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களில் வரிசையில் காத்திருந்தால் சுங்கவரி கட்ட தேவை இல்லை என்பது வதந்தியே  . சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவது பற்றி வந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை. மேலும், இது தொடர்பான எந்தவொரு அறிக்கையும் தாங்கள் வெளியிடவில்லை என்று  நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறையை சார்ந்த அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது .


இந்த வதந்திக்கு ஆதாரமாக காட்டப்பட்ட RTI கூறியதாக காண்பிக்கப்பட்ட தாளில் உள்ள தேதி 2016 என்று உள்ளது . மேலும் இந்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் , இதுபோல் எந்த விலக்கும் அளிக்கவில்லை என்றும்  சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் 27-4-2017 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது .


 இதை அறியாமல் சிலர் சமூக வலைதளங்களில் வேகமாக இச்செய்தியை பரப்பி வருகின்றன . இந்த செய்திகளை உண்மை என்று நம்பி ஊடகங்களும் வெளியிட்டுள்ளனர் .


செய்தி தாள்களிலும் , ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டதால் மக்களும் நம்பியுள்ளனர் . ஃபேஸ்புக் வட்டாரங்களில் இதுபோல் வீண் விளம்பரத்திற்காக வதந்திகளை பகிர்கின்றன . அவர்கள் இனிமேலாவது உண்மை செய்தியை அறிந்து செயல்பட வேண்டும் .

சுருக்கமாக

அப்படியென்றால் இந்தியாவின் போக்குவரத்து நெரிசலை பொறுத்துவரை எவரும் பணம் செலுத்த  வாய்ப்பில்லையே !!!

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க