YouTurn

சீன மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு.

சீன மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல் கலாம் ஐயா அவர்கள் 2010-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாராட்டு விழாவில் பங்குபெற்று சிறப்புரையாற்றினார். அந்நேரத்தில், கலாம் ஐயா தைவான் நாட்டின் சிறந்த கவிஞரான யூ ஷி-யிடம் திருக்குறளின் நகல்களை கொடுத்து சீன மொழியில் மொழி பெயர்க்குமாறு...

பரவிய செய்தி

உலகப்பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறள் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

விரிவான விளக்கம்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல் கலாம் ஐயா அவர்கள் 2010-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாராட்டு விழாவில் பங்குபெற்று சிறப்புரையாற்றினார். அந்நேரத்தில், கலாம் ஐயா தைவான் நாட்டின் சிறந்த கவிஞரான யூ ஷி-யிடம் திருக்குறளின் நகல்களை கொடுத்து சீன மொழியில் மொழி பெயர்க்குமாறு பரிந்துரை செய்தார்.



    தைவான் நாட்டைச் சேர்ந்த யூ ஷி ஒரு புத்த துறவி ஆவார். அவரின் கவிதைகள் பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளன. எனவே திருக்குறள் நூலானது யூ ஷி-யின் மூலம் சீன மொழியில் மொழிப் பெயர்க்கப்படுவதே சிறந்தது என்று நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றினார்.


தமிழ் மொழியின் மிகத் தொன்மையான நீதி இலக்கியமான வள்ளுவரின் திருக்குறளை சீன மொழியில் மொழிப் பெயர்க்க மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ரூ 41.70 லட்சம் நிதி ஒதுக்கி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக செயல்படுத்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்  ".


இந்த சீன மொழி பெயர்ப்புப் பணி, 2012-ன் டிசம்பர் மாதத்தில் யூ ஷி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், திருக்குறளின் ஆங்கில மொழிப் பெயர்ப்பு நூல்களும் அவரிடம் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, திருக்குறளின் சீன மொழிப் பெயர்ப்பை தொடங்கிய யூ ஷி ஓராண்டுக்குள் அதன் பணிகளை முழுவதுமாக நிறைவு செய்தார். திருக்குறளின் சீன மொழி பெயர்ப்பானது, இலக்கண மாற்றமின்றி மற்றும் கடினமில்லாத ஒன்றாக அமைத்துள்ளது. இந்நிலையில் 2014-ல் அதன் அச்சுப் பணிகள் தொடங்கின. இறுதியில் புத்தக வடிவில் வெளியிடவும் செய்தனர்.



    இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.திருமலை கூறியிருந்தது என்னவென்றால், “ உலகம் மேன்மை அடைய தேவையான உயர்ந்த சிந்தனைகள் கொண்ட இலக்கியம் திருக்குறள். அதன் மொழிப் பெயர்ப்பு பணி எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் என்று யூ ஷி உணர்ச்சி மேலோங்க கூறினார். மேலும், யூ ஷி-யிடம் திருக்குறள் மட்டுமின்றி பாரதியார் மற்றும் பாரதிதாசனின் சிறந்த பாடல்கள் பலவற்றையும் சீன மொழியில் மொழிப் பெயர்ப்பு செய்யும் பணியை அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.


தமிழின் மிகப்பழமையான இலக்கிய நூலான திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாக

தமிழ்ப் பல்கலைகழத்தின் வாயிலாக, தைவான் நாட்டின் கவிஞரான யூ ஷி என்பவரால் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு  2014-ம் ஆண்டில் சீன மொழியில் மொழிப் பெயர்ப்பு செய்து வெளியிட்டனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க