
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சீனாவில் சிறு குழந்தைகள் அல்லது குழந்தை கருவை கொன்று சமைத்து உண்பதாகக் கூறிய இப்படங்கள் அனைத்தும் 2001-ம் ஆண்டிலேயே உலகம் முழுவதும் பரவி அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இப்புகைப்படங்களுடன் கூறப்பட்ட செய்தி என்னவென்றால், “பயம் கொள்ள வேண்டாம், இது தைவான்/சீனாவின் சூடான உணவு...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சீனாவில் சிறு குழந்தைகள் அல்லது குழந்தை கருவை கொன்று சமைத்து உண்பதாகக் கூறிய இப்படங்கள் அனைத்தும் 2001-ம் ஆண்டிலேயே உலகம் முழுவதும் பரவி அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இப்புகைப்படங்களுடன் கூறப்பட்ட செய்தி என்னவென்றால்,
“பயம் கொள்ள வேண்டாம், இது தைவான்/சீனாவின் சூடான உணவு.. தைவான்/சீனாவில், இறந்த குழந்தைகள் அல்லது இறந்த கருவை வைத்து சமைக்கப்படும் கிரில்டு மற்றும் பார்பிக்யுடுக்கு அதிகளவில் வரவேற்று இருப்பதால் மருத்துவமனைகளில் இருந்து 50 முதல் 70 டாலர்கள் வரை விலை கொடுத்து குழந்தையின் உடல்களை வாங்குகின்றனர்”.
ஆசிய நாடுகளில் நரமாமிசம் உண்பதாக கூறி இப்படங்கள் உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியதை அடுத்து சட்ட அமலாக்க செயலாண்மைகளான, எஃப்.பி.ஐ, சி.ஐ.ஏ மற்றும் ஸ்காட்லாந்து யார்ட் போன்றவை தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர். பின் மிக விரைவாக அப்படத்தில் இருப்பது யார் என்று அறிந்து உண்மையை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
2000 ஆம் ஆண்டில் ஷான்காய்-ல் "EATING PEOPLE" என்ற தலைப்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் கலந்து கொண்ட சீனாவை சேர்ந்த கலைஞர் ஜ்ஹு யூ, குழந்தையின் கருவை உண்பது போன்ற தனது புகைப்படங்களை அவ்விழாவில் வெளியிட்டது தெரிய வந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2003-ல் UK தொலைகாட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்ட "Beijing Swings" ஆவணப்படத்தில் இப்படங்கள் இடம் பெற்று மேலும் சர்ச்சையை ஏற்படுத்தின.

ஜ்ஹு யூ அளித்த பேட்டியில், இந்த நிகழ்ச்சியில் தனது படைப்பாற்றலுக்காக கருச்சிதைவுற்ற குழந்தையின் உடலை மருத்துவப் பள்ளியில் இருந்து திருடி கொண்டு வந்து அதை சமைத்தேன். அதை உண்ணும் போது மோசமாக இருந்ததாகவும், சில முறை வாந்தி எடுத்ததாகவும் கூறி இருந்தாலும், கலைக்காக இதை செய்ய வேண்டியதாயிற்று என்கிறார். மேலும் உலகில் மனித மாமிசம் உண்ணக்கூடாது என்னும் மனிதகுலத்தின் அறநெறிக்கு எதிராக தனது எதிர்ப்பின் வெளிப்பாடே இப்படங்கள் என்று யூ கூறியுள்ளார்.
இது குறித்து மக்களின் பல்வேறு கருத்துகளுக்கு பிறகு "எந்தவொரு மதமும் மனிதனே மனித கறியை உண்பதை தடை செய்யவில்லை, சட்டத்திலும் அவ்வாறு குறிப்பிடவில்லை. அறநெறிக்கும் சட்டத்திற்கும் இடையேயான இடைவெளியை நான் சாதகமாக பயன்படுத்திக் கொண்டேன்" என்றார் .
யூ வின் படங்களுடன் சில கிராபிக்ஸ் படங்களை இணைத்து சீனாவில் குழந்தைகளை கொன்று உண்பதாக வதந்தியை பரப்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.