YouTurn

சாரணர் இயக்கத் தலைவர் இந்து மகாசபையைச் சேர்ந்தவரா ?

சாரணர் இயக்கத் தலைவர் இந்து மகாசபையைச் சேர்ந்தவரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தலானது 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது இவ்வருடம் நிகழ்ந்தது. சாரணர் இயக்கத் தேர்தல் பற்றி பலரும் அறியாத நிலையில், இவ்வருடம் தமிழகத்தில் அனைவருக்கும் இத்தேர்தல் பற்றி அரிய வைத்தவர் பாஜக தேசிய செயலாளர் திரு ஹெச்.ராஜா...

பரவிய செய்தி

தமிழக சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வி, வெற்றிப் பெற்ற பி.மணி அவர்கள் அகில பாரத இந்து மகாசபையின் முன்னாள் விஸ்தாரக் ஆவார்.

விரிவான விளக்கம்

தமிழக சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தலானது 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது இவ்வருடம்  நிகழ்ந்தது.


 சாரணர் இயக்கத் தேர்தல் பற்றி பலரும் அறியாத நிலையில், இவ்வருடம் தமிழகத்தில் அனைவருக்கும் இத்தேர்தல் பற்றி அரிய வைத்தவர் பாஜக தேசிய செயலாளர் திரு ஹெச்.ராஜா அவர்கள். ஒரு சாரணர் இயக்கத் தேர்தலில் அரசியல் கட்சியை சேர்ந்தவர் போட்டியிட்டது இதுவே முதல் முறையாகும். செப்டம்பர் 16 ம் தேதி நடைபெற்ற தமிழக சாரணர் இயக்கத் தேர்தலில் தலைவர் பதவிக்காக முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநர் பி.மணி மற்றும் பாஜக தேசிய செயலாளர் திரு ஹெச்.ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.


சென்னையில் உள்ள பாரத சாரணர், சாரணியர் இயக்கத் தலைமையகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில், அனைத்து மாவட்டங்களில் உள்ள 504 வாக்காளர்களில் 286 பேர் வாக்களித்தனர்.  பதிவான 286 வாக்குகளில் பி.மணி அவர்கள் 232 வாக்குகளும், ஹெச்.ராஜா அவர்கள் 52 வாக்குகளும் பெற்றனர். இதைத் தொடர்ந்து முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநர் பி.மணி அவர்கள் வெற்றிப்  பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


 


  பாஜக தேசிய செயலாளர் திரு ஹெச்.ராஜா அவர்கள் சாரணர் இயக்கத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து இத்தேர்தல் செல்லாது என்று கூறினார். இப்படி இருக்கையில், சமூக வலைதளங்களில் பலர் சாரணர் இயக்கத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருந்தாலும், பெற்றிப் பெற்ற பி.மணி அவர்கள் அகில பாரத இந்து மகாசபையின் முன்னால் விஸ்தாரக் என்றுக் கூறி செய்திகள் பரவின. எப்படி பார்த்தாலும் வெற்றிப் பெற்றது ஆர்.எஸ்.எஸ் தான் என்று கூறி வந்தனர்.


ஆனால், இது போன்ற எந்தவொரு பதவியிலும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநர் பி.மணி அவர்கள் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை.


திரு.மணி அவர்களை தொடர்புக் கொண்டு இச்செய்தி பற்றி வினவியபோது, இவை அனைத்தும் முற்றிலும் தவறான தகவல்கள் என்று கடுமையாக மறுத்துள்ளார். எனவே, இச்செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்று தெளிவாக விளங்குகின்றன.

சுருக்கமாக

தமிழக சாரணர் இயக்கப் புதிய தலைவர் திரு. மணி அவர்களை தொடர்புக் கொண்டு பேசியப் போது முற்றிலும் தவறான தகவல்கள் என்று கடுமையாக மறுத்துள்ளார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க