YouTurn

சசிகலா & நடராஜன் திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின், அழகிரியா?

சசிகலா & நடராஜன் திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின், அழகிரியா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் மீது நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கியில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை அடுத்து சசிகலா அவர்கள் சிறை சென்றார். சசிகலா அவர்கள் சின்னம்மா என்று அழைக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரை பற்றிய பல செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வந்த வண்ணமே உள்ளன. அவற்றில்...

பரவிய செய்தி

நடராஜன் மற்றும் சசிகலா ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின்.

விரிவான விளக்கம்

 ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் மீது நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கியில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை அடுத்து சசிகலா அவர்கள் சிறை சென்றார். சசிகலா அவர்கள் சின்னம்மா என்று அழைக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரை பற்றிய பல செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வந்த வண்ணமே உள்ளன.


 


 அவற்றில் சசிகலா மற்றும் நடராஜன் ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில்  மு.க.அழகிரி  மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் கலந்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனப் பரவிய செய்திகள் அதிகளவில் பேசப்பட்டன. எனவே அப்படமானது வாட்ஸ்அப் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகின.


1965-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடராஜன் கலந்துக் கொண்டார். மாணவர்கள்  தன்னெழுச்சியாக நடத்திய அப்போராட்டத்தில் அண்ணா தலைமையிலான தி.மு.கவும் கலந்துக் கொண்டது. இப்போராட்டத்தின் மூலம் நடராஜன் அவர்கள் அண்ணாவிடம் அறிமுகம் ஆகினார்.


 தஞ்சை பகுதியின் தி.மு.கவில் மிகமுக்கியமானவர் மண்ணை நாராயணசாமி. இவரது தலைமையில் 1973-ம் ஆண்டு நடராஜரின் திருமணம் நடைபெற்றது. எனினும், சசிகலா மற்றும் நடராஜன் திருமணத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் நடைபெற்றது. அத்திருமணத்தின் படங்கள் பல செய்தித்தாள்களில் வந்துள்ளன.


நடராஜன் மற்றும் சசிகலா திருமணத்தில் கலைஞர் தாலியை எடுத்துக் கொடுக்கும் படத்தையும், இப்படத்தையும் இணைத்து பார்த்தாலே உண்மை எதுவென்று தெரியும். எனவே மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் கலந்துக் கொண்டதாக காண்பிக்கப்படும் படங்களில் இருக்கும் மணமக்கள் சசிகலா மற்றும் நடராஜன் அல்ல என்பது தெளிவாகிறது.


   எனினும், மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டதாகப் பரவிய படங்கள், 1971 ஆம் ஆண்டில் கலைஞரின் உதவியாளர்சண்முகநாதன் என்பவரின் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது ஆகும். இதைத் தவறாகத் திரித்து சமூக வலைதளங்களில் சசிகலா மற்றும் நடராஜன் திருமணப் படங்கள் என்றுப் பரப்பியதால் இப்படங்கள் வைரலாகியது.

சுருக்கமாக





கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் நடராஜன் மற்றும் சசிகலா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது என்பது உண்மை. இருப்பினும், இப்படமானது கலைஞரின் உதவியாளரின் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.




ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க