YouTurn

கோயம்புத்தூரில் பறக்கும் ஆம்புலன்ஸ் சேவை.

கோயம்புத்தூரில் பறக்கும் ஆம்புலன்ஸ் சேவை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோயம்புத்தூரில் உள்ள கங்கா தனியார் மருத்துவமனையில் புதிதாக ஹெலிகாப்ட்டர் ஆம்புலன்ஸ் வசதி செய்துள்ளனர் . இந்த சேவை 2017 ஜூன் 25 முதல் தொடங்கி உள்ளது . இந்தியாவிலேயே முதல் முறையாக மருத்துவத்திற்காக பறக்கும் ஆம்புலன்ஸ்சேவையை கொண்டு வந்து உள்ளனர் . 1992 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இரட்டை இன்ஜின் கொண்ட...

பரவிய செய்தி

கோயம்புத்தூரில் உள்ள கங்கா தனியார் மருத்துவமனை பறக்கும் ஆம்புலன்ஸ் வசதியை செய்து உள்ளது .

விரிவான விளக்கம்

 கோயம்புத்தூரில் உள்ள கங்கா தனியார் மருத்துவமனையில் புதிதாக ஹெலிகாப்ட்டர் ஆம்புலன்ஸ் வசதி செய்துள்ளனர் . இந்த சேவை 2017 ஜூன் 25 முதல் தொடங்கி உள்ளது . இந்தியாவிலேயே முதல் முறையாக மருத்துவத்திற்காக பறக்கும் ஆம்புலன்ஸ்சேவையை கொண்டு வந்து உள்ளனர் .


1992 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இரட்டை இன்ஜின் கொண்ட  109c ரக ஹெலிகாப்ட்டர் அவரச மருத்துவ சேவைக்காக கங்கா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ஏ.எப் விமான முதன்மை தளவாய் பிஎஸ் தானோ கூறியுள்ளார் .


இந்த ஹெலிகாப்ட்டரில் அவசர சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதி , இரண்டு படுக்கைகள் , நோயாளிகளின் உடல்நிலையை கண்காணிக்க பல்ஸ் மற்றும் பிரஷர் மானிட்டர் போன்ற பல அம்சங்கள் அடங்கி உள்ளன . இந்த வகை ஹெலிகாப்ட்டர்கள் அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் போது நோயாளிகளை எடுத்து செல்லவும் , இதயம் போன்ற உடல் உறுப்பு பாகங்களை வேறு இடத்தில் இருந்து எடுத்து வரவும் பயன்படப்போவதாக தெரிவித்துள்ளனர் . இந்த ஹெலிகாப்ட்டரின் தரை இறங்கும் தளம் கங்கா நர்சிங் காலேஜ் பகுதியில் உருவாக்கப்படும் என்று அதன் இயக்குனர் கூறியுள்ளார் .


டெல்லியை சேர்ந்த தனியார் விமான நிறுவனத்துடன் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்ட்டர் வாங்கப்பட்டுள்ளது . பறக்கும் ஆம்புலன்ஸ்க்கு ஒரு மணி நேர வாடகையாக ஒரு லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குனர் கூறினார் .


அவசரகால உதவிகளுக்கு இது போன்ற பறக்கும் ஆம்புலன்ஸ் வசதி மிகவும் உதவியாக இருக்கும் . நம் தமிழகத்தில் இந்த வசதியை கொண்டு வந்ததற்கு கங்கா மருத்துவமனைக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .

சுருக்கமாக

முதல் முறையாக மருத்துவமனையில் அவசர உதவிக்கு  ஹெலிகாப்ட்டர் வசதி செய்துள்ளனர் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க