
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கோக்க கோலா குளிர்பானத்தின் செய்முறை பற்றி அறிந்தவர்கள் இவ்வுலகில் இருவர் மட்டுமே உள்ளனர். எனினும், அவர்கள் இணைந்து பயணம் செய்ய அனுமதி இல்லை என்றுக் கூறி சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவுகின்றன. கோக்க-கோலா குளிர்பான நிறுவனம் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. இந்நிறுவனம் 1886 இல் Dr.john...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கோக்க கோலா குளிர்பானத்தின் செய்முறை பற்றி அறிந்தவர்கள் இவ்வுலகில் இருவர் மட்டுமே உள்ளனர். எனினும், அவர்கள் இணைந்து பயணம் செய்ய அனுமதி இல்லை என்றுக் கூறி சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவுகின்றன.
கோக்க-கோலா குளிர்பான நிறுவனம் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. இந்நிறுவனம் 1886 இல் Dr.john s.pemberton என்பவரால் அட்லாண்டாவில் நிறுவப்பட்டது . இந்த குளிர்பானத்தின் செய்முறை பற்றிய தகவல்கள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது .
இந்த ரகசியம் ஒரு சில அமைப்புகளுக்கு மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது . இந்த கோக்க-கோலாவின் செய்முறை சூத்திரம் எழுதப்பட்ட தாளின் ஒரு சிறு பகுதி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா என்ற பகுதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நம்மால் அங்கு சென்று அந்த பெட்டகத்தைப் பார்க்க இயலும்.
Our beginnings in atlanta in 1886 என்ற புத்தகத்தின் வாயிலாக கோக்க-கோலா பற்றிய முழுவிவரத்தை அறியலாம் . இத்தகைய தவறான கருத்துகளுக்கு பதிலாக கோக்க-கோலா போன்ற குளிர்பானங்களின் செய்முறை பற்றியும் அவற்றில் உள்ள தீமைகள் பற்றியும் கூறினால் நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் .