YouTurn

குடிமக்களுக்கு 700 மில்லியன் டாலரை ஊக்கத் தொகையாக வழங்கும் சிங்கப்பூர் தேசம்.

குடிமக்களுக்கு 700 மில்லியன் டாலரை ஊக்கத் தொகையாக வழங்கும் சிங்கப்பூர் தேசம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

சிங்கப்பூரின் நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் பிப்ரவரி 19-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில், 2017-2018 நிதியாண்டின் உபரி வருவாயானது எதிர்பார்ப்பை விட 9.61 பில்லியன் சிங்கப்பூர் டாலர் ஆக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.1% அதிகரித்ததாகவும்...

பரவிய செய்தி

700 மில்லியன் டாலர் உபரி வருவாயை மக்களுக்கு போனஸாக பிரித்து கொடுக்க சிங்கப்பூர் அரசு முடிவு.

விரிவான விளக்கம்

சிங்கப்பூரின் நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் பிப்ரவரி 19-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில், 2017-2018 நிதியாண்டின் உபரி வருவாயானது எதிர்பார்ப்பை விட 9.61 பில்லியன் சிங்கப்பூர் டாலர் ஆக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.1%  அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 47,211 கோடி ஆகும்.



சிங்கப்பூர் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்று நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிங்கப்பூர் மக்களுக்கு அரசாங்கம் பழத்தை பகிர்ந்துகொள்ள விருப்பப்படுகிறது. ஆக, 2018 இறுதிக்குள் சிங்கப்பூர் மக்களுக்கு “ ஹாங்பாவ் ” என்னும் சிறப்பு போனஸை வழங்க உள்ளதாக ஹெங் அறிவித்துள்ளார்.

நாட்டின் செலவுகளை விட வருவாய் அதிகரித்த காரணத்தினால் உபரி வருவாய் அதிகமாக கிடைத்துள்ளது. இதனால், சிங்கப்பூர் மக்களுக்கு இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை ஊக்கத் தொகையாக கிடைக்க வாய்ப்புள்ளது.



இத்தகைய சிறப்பு போனஸால் 27 லட்ச சிங்கப்பூர் குடிமக்கள் பயன்பெறுவர். மேலும், 21 வயது நிரம்பியவர்கள் இந்த சிறப்பு போனஸ் தொகையைப் பெறத் தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் உபரி வருவாயில் 700 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் குடிமக்களுக்கு அவர்களின் வருமான நிலைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு மொத்தம் 3,438 கோடியாகும். 



அதாவது, ஆண்டு வருமானம் 28,000 டாலர்கள் (ரூ.13.76 லட்சம்) அல்லது அதற்கு கீழ் பெறுபவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்களும் (ரூ.14,736) , 1,00,000 டாலர்களுக்கு அதிகமான வருமானம் ஈட்டுபவர்களுக்கு  100 டாலர்களும் (ரூ.4912) , 28,000 முதல் 1,00,000 டாலர்களுக்கு இடைப்பட்ட வருமானம் ஈட்டுபவர்களுக்கு தலா 200 டாலர்களும் (ரூ.9,825) அரசு வழங்க உள்ளது.

நாட்டின் வளர்சிக்கு உறுதுணையாக இருக்கும் குடிமக்களுக்கு இதுபோன்ற ஊக்கத் தொகை வழங்குவது மேன்மையிலும் மேன்மையான செயலாகும்.

சுருக்கமாக

சிங்கப்பூரின் பட்ஜெட்டில் உபரி வருவாய் அதிகரித்துள்ளதால் குடிமக்களுக்கு சிறப்பு போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க