யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தொன்மையான நாகரிகம் இருந்தற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன. கீழடி ஆய்வைப் பற்றிப் பெரிதும் பேசப்பட்ட பின்னரே ஆய்வானது வேகமாக நடைபெற துவங்கின. இந்த ஆய்வில் பழமையானப் பொருட்கள் பலவற்றை கண்டுபிடித்தனர். எனவே கீழடியில் அடுத்தக் கட்ட அகழாய்வை தொடங்க வேண்டும்...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தொன்மையான நாகரிகம் இருந்தற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன. கீழடி ஆய்வைப் பற்றிப் பெரிதும் பேசப்பட்ட பின்னரே ஆய்வானது வேகமாக நடைபெற துவங்கின. இந்த ஆய்வில் பழமையானப் பொருட்கள் பலவற்றை கண்டுபிடித்தனர். எனவே கீழடியில் அடுத்தக் கட்ட அகழாய்வை தொடங்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.
தற்போது மூன்றாம் கட்ட அகழ்வு ஆராய்ச்சி முடிவடையும் வேளையில், நான்காம் கட்ட அகழாய்விற்கு இரண்டு வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், கீழடியில் நடைபெற உள்ள நான்காம் கட்ட ஆய்வுப் பணிகளில் தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.சதிஷ்குமார் ஆகியோரின் தலைமையைக் கொண்ட அமர்வுப் பிறப்பித்த உத்தரவில், கீழடியில் நான்காம் கட்ட ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான உரிமத்தை மத்திய அரசு இரண்டு வாரங்களில் புதுப்பிக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கீழடியில் அகழாய்வை நடத்த வேண்டும் என்று வேண்டும் என்றும், அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கு முன் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழிமதி அவர்கள் தொடர்ந்த வழக்கியில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருள்களை வைத்து அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும், கீழடி ஆராய்ச்சியில் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இச்சூழலில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை அமர்வு நீதிபதிகள் கீழடியின் நான்காம் கட்ட அகழாய்விற்கு இரண்டு வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும் என்றுக் கூறி வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.