YouTurn

கிரிக்கெட் பயணத்தில் ஒரு முறை கூட “நோ பால்” வீசாத கபில்தேவ்.

கிரிக்கெட் பயணத்தில் ஒரு முறை கூட “நோ பால்” வீசாத கபில்தேவ்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த " கபில்தேவ் ராம்லால் நிக்கஞ் " மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 1978 ஆம் ஆண்டில் இந்திய அணியில் இடம் பிடித்த கபில்தேவ், படிப்படியாக முன்னேறி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கபில்தேவ் மிகச்சிறந்த “ ஆல் ரவுண்டர் ” ஆவார். மேலும், இவர் வலது கை...

பரவிய செய்தி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது கிரிக்கெட் பயணத்தில் ஒரு முறை கூட “ நோ பால் ” வீசியது இல்லை என்பது எத்தனை பெயருக்கு தெரியும்.

விரிவான விளக்கம்

ரியானா மாநிலத்தைச் சேர்ந்த " கபில்தேவ் ராம்லால் நிக்கஞ் " மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 1978 ஆம் ஆண்டில் இந்திய அணியில் இடம் பிடித்த கபில்தேவ், படிப்படியாக முன்னேறி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கபில்தேவ் மிகச்சிறந்த “ ஆல் ரவுண்டர் ” ஆவார். மேலும், இவர் வலது கை பந்து வீச்சு திறனுடையவர்.



    1983-ம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தி கோப்பையை வென்று தந்தார். மிகச்சிறந்த வீரரான கபில்தேவிற்கு ஹரியானா புயல் என்ற பட்டப் பெயர் உள்ளது.


" 1978 முதல் 1994-ம் ஆண்டு வரை 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கபில்தேவ், 434 விக்கெட்டுகள் மற்றும் 5,248 ரன்களையும் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவின் சராசரி(Avg) 29.65 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கபில்தேவ் 20 “ நோ பால்ஸ் ” மற்றும் 3 வோயிடுகள் என 23 பந்துகளை தவறுதலாக வீசியுள்ளார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 253 விக்கெட்களையும், 3,783 ரன்களையும் பெற்றுள்ளார் ".


இதிலிருந்து கபில்தேவ் ஓர் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை அறிய முடிகிறது. கபில்தேவ் தனது வாழ்நாளில் நோ பால்களே வீசியதில்லை என்று கூறியது தவறாக இருந்தாலும் அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.  டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்கள் அடிப்படையில் சிறந்த வீரர்களின் தர வரிசை,







































































































பந்துவீச்சாளர்



நாடு



தொடக்கம்



முடிவு



ஆட்டங்கள்


விக்கெட்கள்

வோயிடுகள்



நோ பால்ஸ்



மொத்தம்



சராசரி



முரளிதரன்



ஸ்ரீல



1992



2010



133



800



2



388



390



22.73%



வார்னே



ஆஸி



1992



2007



145



708



23



163



186



25.42



கும்ப்ளே



இந்



1990



2008



132



619



10



270



280



29.65%



மெக்ராத்



ஆஸி



1993



2007



124



563



26



364



390



21.64%



வால்ஸ்



மே.இ



1984



2001



132



519



12



392



404



24.44%



கபில்தேவ்



இந்



1978



1994



131



434



3



20



23



29.65%



பொல்லாக்



தெ.ஆ



1995



2008



108



421



28



602



630



23.12%



 

    டெஸ்ட் போட்டிகளில் உலகளவில் அதிக நோ பால்கள் வீசியவர்கள் பட்டியில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மித வேகப்பந்து வீச்சாளர் பொல்லாக் 602 நோ பால்களை வீசியுள்ளார் . இருப்பினும், சராசரின் அடிப்படையில் குறைந்த போட்டிகளில் அதிக நோ பால்கள் வீசியதில் இலங்கையின் மலிங்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

சுருக்கமாக

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மொத்தம் 20 “ நோ பால்ஸ் ” மற்றும் 3 வோயிடுகளை வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க