YouTurn

காமராஜர் அவர்களுக்கு எலிசபெத் ராணி உணவு பரிமாறினாரா ?

காமராஜர் அவர்களுக்கு எலிசபெத் ராணி உணவு பரிமாறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தலைவரான ஐயா காமராஜர் அவர்களுக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்கள் உணவு பரிமாறுகிறார் என்று கூறிச் சில படங்கள் வலைதளங்களில் வைரலாகியது. அப்படத்தின் உண்மையான கதையை பார்ப்போமாக! சென்னை அண்ணா சாலைக்கு மற்றொரு சிறந்த அடையாளம் மற்றும் 19 ம் நூற்றாண்டிற்கு பிறகு...

பரவிய செய்தி

காமராஜர் ஐயா அவர்களுக்கு உணவு பரிமாறும் இங்கிலாந்து மகாராணி எலிசபெத். உலகின் வேறு எந்த நாட்டு தலைவருக்கும் மகாராணி இப்படி ஒரு மரியாதையை வழங்கியதாக கேள்விப்பட்டதில்லை.

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தலைவரான ஐயா காமராஜர் அவர்களுக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்கள் உணவு பரிமாறுகிறார் என்று கூறிச் சில படங்கள் வலைதளங்களில் வைரலாகியது. அப்படத்தின் உண்மையான கதையை பார்ப்போமாக!


சென்னை அண்ணா சாலைக்கு மற்றொரு சிறந்த அடையாளம் மற்றும் 19 ம் நூற்றாண்டிற்கு பிறகு அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட ரொட்டி நிறுவனம் தான் bosotto bros. 1928 ம் ஆண்டில், மெட்ராஸ் ஆளுநர் bosotto bros அதிகாரிகளை உத்தியோகபூர்வ சமையல்காரர்களாக நியமித்து சான்றிதழ்களை வழங்கினார். இந்த சான்றிதழ்கள் இன்றளவும் அந்த பேக்கரியால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.


இந்நிறுவனம் பலரது கைகளுக்கு மாறினாலும் இறுதியாக பி.முஸ்லபா சௌத்ரியிடம் விற்கப்பட்டது. அதன் பின்னர் bosotto bros பேக்கரி விரிவுப்படுத்தப்பட்டது. மேலும் இந்த பேக்கரி கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாகும். இந்த பேக்கரி பற்றி கவிஞர் அவர்கள் சிறந்த பாடல்கள் சிலவற்றை எழுதியுள்ளார் என்று பேக்கரியின் மூன்றாம் தலைமுறை உரிமையாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் கூறியுள்ளார்.


1960 களில் தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றிய ஐயா காமராஜர் அவர்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்ததாகவும், ஐயாவிற்கு ரொட்டிகள் வழங்குவது வழக்கமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி இளவரசர் அன்ட்ருவின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு கேக் ஒன்றை செய்யுமாறு காமராஜர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மகாராணி அவர்கள் சென்னை வந்து சேர்ந்தார். இளவரசர் அன்ட்ருவின் பிறந்தநாள் நிகழ்ச்சியானது ராஜாஜி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் கேக்கை வெட்டும்போது அருகில் காமராஜர் ஐயா, இளவரசர் பிலிப் ஆகியோர்  அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படமானது இன்றளவும் பேக்கரியை அலங்கரித்து வருவதாக ராஜ்குமார் அவர்கள் கூறியுள்ளார்.


இதுவே இப்புகைப்படத்திற்கு பின்னால் உள்ள உண்மையான கதையாகும். இதையறியாமல் சிலர் தவறாகப் புரிந்துக் கொண்டு வதந்தியை பரப்பியுள்ளனர். ஐயா காமராஜர் அவர்களுக்கு பெருமை சேர்காவிடினும், அவர் செய்த பல நற்காரியங்களால் பெற்ற பெருமைகளை சீர்குலைக்காமல் இருப்பதே நன்று.

சுருக்கமாக

இளவரசர் அன்ட்ருவின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் அவர்கள் கேக்கை வெட்டும்போது  எடுக்கப்பட்ட படம் இது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க