YouTurn

காந்தியை கொன்ற கோட்சேவை மோடி வணங்கினாரா ?

காந்தியை கொன்ற கோட்சேவை மோடி வணங்கினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2014 ஆம் ஆண்டில் தனிப் பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். அன்றிலிருந்து அவரது மீது பல சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளன. பிரதமரின் 10 லட்ச ரூபாய் ஆடையில் தொடங்கி காந்தியை வணங்குவது வரை சர்ச்சைகள் நீண்டுக் கொண்டே செல்கின்றன...

பரவிய செய்தி

இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தேச தந்தை காந்தியை வணங்க மாட்டாராம். தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சேவை வணங்குவராம்.

விரிவான விளக்கம்

2014 ஆம் ஆண்டில் தனிப் பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். அன்றிலிருந்து அவரது மீது பல சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளன.


பிரதமரின் 10 லட்ச ரூபாய் ஆடையில் தொடங்கி காந்தியை வணங்குவது வரை சர்ச்சைகள் நீண்டுக் கொண்டே செல்கின்றன. இருப்பினும், காந்தியை மோடி அவர்கள் வணங்கவில்லை மற்றும் கோட்சேவை வணங்குகிறார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன. பிரதமரின் அதிரடித் திட்டங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்றனவா அல்லது தோல்வியடைந்தனவா என்று மக்கள் குழப்பமடைந்த நேரத்தில், எதைக் கூறினாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று எண்ணி சிலர் வதந்திகளை பரப்பியுள்ளனர்.


  abe visit india


   செப்டம்பர் 13 ம் தேதி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 2 நாள் அரசுப் பயணமாக இந்தியா வந்தார். அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த ஜப்பான் பிரதமரையும், அவரது மனைவியையும் மோடி அவர்கள் நேரில் சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு ஜப்பான் பிரதமரும், மோடி அவர்களும் காரில் சென்றனர். ஆசிரமத்திற்கு செல்லும் வழியில் மக்கள் பலர் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேலும் அரசின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆசிரமத்திற்கு சென்ற பிறகு அங்குள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அவரது மனைவி அகி அபே மற்றும் மோடி அவர்கள் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார்கள். அப்பொழுது மோடி அவர்கள் காந்தியின் சிலையை வணங்குவார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்தால் காந்தியை வணங்கியதை அறியலாம்.


 


  மோடி அவர்கள் கோட்சேவை வாங்குவதாக காண்பிக்கப்படும் படத்தில் இருப்பவர் வீர் சவர்கர் ஆவார். மே மாதம் 28ம் தேதி நடைபெற்ற வீர் சவர்கரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட மோடி அவர்கள் சவர்கரின் சிலையை வணங்கியபோது எடுக்கப்பட்ட படம். வீர் சவர்கர் நரேந்திர மோடி அவர்களின் முன்மாதிரியாவர். மேலும் மோடி அவர்கள் தனது இளமைப் பருவத்தில் வீர் சவர்கர் பற்றி அதிகம் படித்ததாகக் கூறியுள்ளார் .


உண்மைக்கு  புறம்பான செய்திகள் பிரதமரின் மீது தொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மோடி அவர்கள் கோட்சேவை வணங்கவில்லை என்று தெளிவாக அரிய முடிகிறது.

சுருக்கமாக

பிரதமர் மோடி அவர்கள் மகாத்மா காந்தியை வணங்கியுள்ளார் என்பதற்கும், அவர் கோட்சேவை வணங்கவில்லை என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க