YouTurn

கடலை மிட்டாய்க்கு GST வரி 18 சதவிகிதமா ?

கடலை மிட்டாய்க்கு GST வரி 18 சதவிகிதமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

GST என்ற சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசாங்கம் புதிதாக இந்த ஆண்டில் அமல்படுத்தியது . இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே விதமான வரி கொள்கையை கடைப்பிடிக்க போவதாக கூறியுள்ளனர் . இதில் பலதரப்பட்ட பொருள்களுக்கு உண்டான வரிகளை தெரிவித்துள்ளன . குறிப்பாக குடிசை தொழிலான கடலை மிட்டாய்க்கு 18 சதவிகிதம்...

பரவிய செய்தி

எளியவர்களும் உண்ணக்கூடிய இனிப்பு பொருள் தான் கடலை மிட்டாய் அதற்கு GST வரி 18 சதவிகிதமா ...

விரிவான விளக்கம்

 GST என்ற சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசாங்கம் புதிதாக இந்த ஆண்டில் அமல்படுத்தியது . இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே விதமான வரி கொள்கையை கடைப்பிடிக்க போவதாக கூறியுள்ளனர் . இதில் பலதரப்பட்ட பொருள்களுக்கு உண்டான வரிகளை தெரிவித்துள்ளன .


குறிப்பாக குடிசை தொழிலான கடலை மிட்டாய்க்கு 18 சதவிகிதம் வரியை விதித்துள்ளதாக என்ற செய்தி அதிகமாக பேசப்பட்டது . ஆனால் உண்மை இல்லை என்று மத்திய சேவை மற்றும் சுங்கவரி ஆணையர் சரவண குமார் தெரிவித்துள்ளார் .


கடலை மிட்டாய்க்கு 5 சதவிகிதம் வரி மட்டுமே விதித்துள்ளனர் . கடலை மிட்டாயை குடிசை தொழிலாக செய்பவர்களுக்கு இது பொருந்தும் .


இது தொடர்பான செய்திகள் செய்திதாள்களிலும் , ஊடகங்களிலும் வந்துள்ளது . சிலர் தவறாக புரிந்து கொண்டு பணக்காரர்கள் சாப்பிடும் பிட்சாவிற்கு 5% வரியை கொடுத்துவிட்டு ஏழைகள் உண்ணும் கடலை மிட்டாய்க்கு 18% வரியை விதித்துள்ளனர் என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்தன .


உணர்வு பூர்வமான செயல்களுக்கு கோபம் வருவது இயற்கையே தவறில்லை , ஆனால் உண்மை எது பொய் எது என்று அறிந்து கோபப்படுங்கள் .

சுருக்கமாக

கடலை மிட்டாய்க்கு 5 சதவிகிதம் வரி மட்டுமே விதித்துள்ளனர்..

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க