YouTurn

உலகின் மிக நீளமான காரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

உலகின் மிக நீளமான காரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஜே ஒபெர்க் என்ற நிறுவனம் உலகின் மிக நீளமான கார் ஒன்றை தயாரித்துள்ளது . 26 சக்கரங்களை கொண்ட இந்த காரின் நீளம் 33.5m அதாவது 100 அடி நீளமாகும் . ரெயில்களில் இருப்பது போல் இந்த காரின் முன்பக்கத்திலும் , பின் பக்கத்திலும் ஓட்டுனர் கேபினும் உள்ளது . பார்க்க நீளமாக...

பரவிய செய்தி

26 சக்கரங்களை கொண்டு உலகின் நீளமான கார் என்ற ஆச்சரியம் படைத்துள்ள இந்த காரில் நீச்சல் குளம் , ஹெலிகாப்ட்டர் தரையிறங்கும் வசதி , பெரிய நீர் படுக்கை போன்ற அணைத்து வசதிகளை உள்ளன .

விரிவான விளக்கம்

  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஜே ஒபெர்க் என்ற நிறுவனம் உலகின் மிக நீளமான கார் ஒன்றை தயாரித்துள்ளது . 26 சக்கரங்களை கொண்ட இந்த காரின் நீளம் 33.5m அதாவது 100 அடி நீளமாகும் . ரெயில்களில் இருப்பது போல் இந்த காரின் முன்பக்கத்திலும் , பின் பக்கத்திலும் ஓட்டுனர் கேபினும் உள்ளது . பார்க்க நீளமாக இருப்பதால் குறுகிய தெருக்களில் எவ்வாறு திரும்ப இயலும் என்ற பிரச்சனை வராமல் இருக்க வளைவதற்கு ஏற்றவாறு காரின் நடுப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது .


அரண்மனைகளை மிஞ்சும் அளவிற்கு பல சொகுசான வசதிகள் உள்ளவாறு ஆடம்பரமாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது . காரின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால் , இதில் நீச்சல் குளம் , ராஜாக்கள் போல் உறங்க நீர்ப் படுக்கை , சிறியரக ஹெலிகாப்ட்டர் தரையிறங்க ஹெலிபேடு , செயற்கைக்கோள் தொடர்புசாதனங்கள் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது .


கண்காட்சிகளில் வைப்பதற்காக முதலில் இந்த கார் தயாரிக்கப்பட்டாலும் இதை வாங்குவதற்கு செல்வந்தர்கள் பலர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் . சாலைகளில் ஓட்டுவதற்கு இன்னும் அனுமதி வாங்கவில்லை என்றாலும் ஹாலிவுட் படக்காட்சிகள் , திருமண ஊர்வலங்கள் போன்ற நிகழ்சிகளுக்கு காரை வாடைக்கு எடுக்க சிலர் முயற்சிக்கின்றன .


உலகின் மிகநீளமான கார் என்று கின்னஸ் சாதனை படைத்த இந்த காரின் ஒரு நாள் வாடகை லட்ச கணக்கில் இருக்கலாம் என்று கூறி வருகின்றனர் . இனி ஹாலிவுட் படங்களில் இந்த சொகுசு கார் சூப்பர்ஸ்டார் போன்று வலம்வரும் .


சுருக்கமாக

உலகில் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பல புதிய கண்டுப்பிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க