YouTurn

உயிர்க் காக்கும் 51 மருந்துகள் விலையைக் குறைத்தது என்.பி.பி.ஏ.

உயிர்க் காக்கும் 51 மருந்துகள் விலையைக் குறைத்தது என்.பி.பி.ஏ.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்துகளின் விலையை ஒழுங்குப்படுத்தும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் (NPPA) உயிர்க் காக்கும் 51 மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளது. மருந்துத்துறையைச் சேர்ந்த என்.பி.பி.ஏ ஆணையம் மத்திய வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள் தொடர்பான அமைச்சரவையின் கீழ்...

பரவிய செய்தி

இந்தியாவின் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமான NPPA 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை 6 முதல் 53 சதவீதம் வரையில் குறைத்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான பல்வேறு மருந்துகளின் விலையானது குறைந்திருக்கிறது.

விரிவான விளக்கம்




இந்தியாவில் பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்துகளின் விலையை ஒழுங்குப்படுத்தும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் (NPPA) உயிர்க் காக்கும் 51 மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளது. மருந்துத்துறையைச் சேர்ந்த என்.பி.பி.ஏ ஆணையம் மத்திய வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள் தொடர்பான அமைச்சரவையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஆணையம், 1997 ஆம் ஆண்டில் இருந்து மருந்து பொருட்களின் விலையை கண்காணிப்பதும், ஒழுங்குப்படுத்தும் பணியையும் செய்து வருகின்றது.



  கடந்த நவம்பர் 24-ம் தேதி வெளியான என்.பி.பி.ஏ-வின் அறிக்கையின் படி, புற்றுநோய், இருதய நோய், தோல் நோய் ஆகியவற்றின் சிகிச்சைக்கு வழங்கப்படும் 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை 6 முதல் 53 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 23 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் சில்லறை விலையையும் நிர்ணயம் செய்துள்ளது.


2013-ம் ஆண்டு மருந்து விலை குறைப்பு விதி பிரிவு 1-ன் கீழ் விலையை நிர்ணயம் செய்துள்ளனர். ஆக, 36 வகையான மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்தும், 15 வகையான மருந்துகளின் விலையை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து விலை குறைப்பை ஏற்று மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று என்.பி.பி.ஏ கேட்டுக் கொண்டுள்ளது.


இதில், புற்றுநோய் சிகிச்சைக்கான ஆக்ஸாலிபிளாடின் ஊசி மருந்து, தட்டம்மை, ரூபெல்லா, ஜப்பானிய மூளை வீக்கம் போன்ற நோய்களுக்கான மருந்துகளின் அதிகபட்ச விலை நிர்ணயம் செய்துள்ளனர். மேலும், சேவபுளூரேன், பைட்டோமெனடியோன், காசநோய் நோய் தடுப்பான பிசிஜி ஆகியவற்றின் விலையையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.






சுருக்கமாக

புற்றுநோய், இருதய நோய், தோல் நோய் போன்றவற்றின் சிகிச்சைக்கு வழங்கப்படும் 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையமான என்.பி.பி.ஏ நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க