YouTurn

உண்மையில் துபாயில் விவேகானந்தர் தெருவா ?

உண்மையில் துபாயில் விவேகானந்தர் தெருவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் பார்த்திபனிடம் துபாயில் இருந்த விலாசம் பற்றி வடிவேலு விசாரிக்கும் காட்சி மிகவும் பிரபலமடைந்த நகைச்சுவை காட்சி. வடிவேலுவின் அத்தகைய கேள்விக்கு, No.6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் என்று பார்த்திபன் பதில் அளித்திருப்பார்...

பரவிய செய்தி

வடிவேலு படத்தில் பார்த்திபன் கூறியது போன்று உண்மையில் துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு இருக்கு. என்ன ஒரு ஆச்சரியம்..! செய்தியாகவும், மீமாகவும் பரப்புகிறார்கள்

விரிவான விளக்கம்

வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் பார்த்திபனிடம் துபாயில் இருந்த விலாசம் பற்றி வடிவேலு விசாரிக்கும் காட்சி மிகவும் பிரபலமடைந்த நகைச்சுவை காட்சி.



வடிவேலுவின் அத்தகைய கேள்விக்கு, No.6,  விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் என்று பார்த்திபன் பதில் அளித்திருப்பார்.

அப்படம் பார்த்த அனைவருக்குமே அது தவறான முகவரி என்று நன்றாகவே தெரியும். இருப்பினும்,  விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்று எழுதப்பட்ட பெயர் பலகையின் அருகே ஒருவர் நிற்கும் படமானது தற்போது ஒரு சில மீம் பக்கங்களால் பகிரப்பட்டு வருகிறது.



விவேகானந்தர் தெரு என்று எழுதப்பட்ட பலகையில் ஆங்கிலத்திற்கு மேலே அரபு மொழியிலும் எழுதப்பட்டிருக்கும். அதில், துபாய் மெயின் ரோடு வார்த்தையை அரபில் எழுதிருப்பர். அதில் ரோடுக்கு உரித்தான அரபி வார்த்தை “Jumeira ” பகுதியின் பெயராகும்.

ஆக, ஃபோட்டோ ஷாப் மூலம் பெயர் பலகையை மாற்றியதை கூட சரியான அர்த்ததில் எழுதவில்லை . இதை அறியாமல் சில மீம் பக்கங்களும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க