YouTurn

இவர் பிரதமர் மோடியின் சகோதரரா ?

இவர் பிரதமர் மோடியின் சகோதரரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆம், எளிமையான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார்கள் , பிரதமரின் சகோதரர் அல்ல தேசத்தின் சாதாரண மக்களே . இந்த படங்களில் இருப்பவர்கள் பிரதமரின் சகோதரர் அல்ல . முதல் படத்தில் இருப்பவர் கேரளாவை சேர்ந்த 61 வயதான ராமசந்திரன் என்பவர் . இவர் பார்க்க பிரதமர் போல் இருப்பதால் அனைவரும் இவருடன் வந்து...

பரவிய செய்தி

பிரதமர் மோடி அவர்களின் சகோதரர் எப்படி எளிமையாக வாழ்ந்து வருகிறார் பாருங்கள் , இனியாவது தேசத்தலைவர் மோடி அவர்களை நினைத்து பெருமைப்படுங்கள் .

விரிவான விளக்கம்

ஆம், எளிமையான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார்கள் , பிரதமரின் சகோதரர் அல்ல தேசத்தின் சாதாரண மக்களே . இந்த படங்களில் இருப்பவர்கள் பிரதமரின் சகோதரர் அல்ல .


முதல் படத்தில் இருப்பவர் கேரளாவை சேர்ந்த 61 வயதான ராமசந்திரன் என்பவர் . இவர் பார்க்க பிரதமர் போல் இருப்பதால் அனைவரும் இவருடன் வந்து புகைப்படம் எடுத்து கொள்கின்றதாக கூறியுள்ளார் . பெங்களூரில் வேலைபார்க்கும் தன் மகனை பார்பதற்காக சொந்த ஊரான பையனூர் ரெயில்நிலையத்தில்  காத்திருந்த போது இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது .


அதில் சில மாற்றங்களை மேற்கொண்டு இணையத்தில் வெளியிட்டுள்ளனர் . இந்த படத்தை மாற்றி மோடியின் சகோதரர் என்று கூறி ஒரு தவறான பதிவை பதிவிட்டுள்ளனர் .


இரண்டாவது உள்ள புகைப்படத்தில் , அலகாபாத் ஆட்டோ ஓட்டுனர் பார்ப்பதற்கு மோடியை போன்று இருப்பதால் அவரின் படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதை மாற்றி மோடியின் சகோதரர் என்று கதையை உருவாக்கி உள்ளனர்.


இவ்வாறு ஒரு சில தேசப்பக்தர்கள் போட்டோஷாப் மூலம் விளம்பரம் தேட பார்க்கின்றார்கள் . போட்டோ ஷாப் மூலம் விளம்பரம் தேடாமல் மக்களுக்கு நன்மை செய்து நற்பெயரை எடுங்கள் ..

சுருக்கமாக

விளம்பரத்திற்காக சிலபேரால் செய்யப்பட்ட  போட்டோஷாப் வேலை தான் இந்த படம் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க