YouTurn

இவர் பங்களாதேஷ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரா ?

இவர் பங்களாதேஷ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த செய்தியை கேட்ட உடன் பல இந்திய இளைஞர்களின் இதயம் படார் என்று வெடித்து இருக்கும் , பலர் சாபங்கள் கூட கொடுத்து இருப்பார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய செய்தி இது . திரைத்துறையை பொறுத்த வரை இது சாத்தியம் தானே . ஆனால் இது ஒரு தவறான செய்தியாகும் . படத்தில் இருப்பவர் பங்களாதேசை சேர்ந்த அஷ்ரபுல்...

பரவிய செய்தி

இளம்பெண்களின் கனவு நாயகன் , பங்களாதேஷ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இவர் தான் .

விரிவான விளக்கம்

இந்த செய்தியை கேட்ட உடன் பல இந்திய இளைஞர்களின் இதயம் படார் என்று வெடித்து இருக்கும் , பலர் சாபங்கள் கூட கொடுத்து இருப்பார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய செய்தி இது . திரைத்துறையை பொறுத்த வரை இது சாத்தியம் தானே . ஆனால் இது ஒரு தவறான செய்தியாகும் .


படத்தில் இருப்பவர் பங்களாதேசை சேர்ந்த அஷ்ரபுல் அலாம் சயீத் ஆவார் . இவர் இசை ஆல்பங்களில் நடிப்பவர் . ஆரம்பத்தில் திரைப்படங்களின் சீடிகளை விற்பனை தொழில் செய்து வந்தவர் . பிறகு செயற்கைக்கோள் தொலைக்காட்சி இணைப்புகள் போன்ற தொழிலை மேற்கொண்டார் .


தன் பொழுதுபோக்கிற்காக இசை ஆல்பங்களில் நடிக்க செய்தார் . இதனால் இவரை வைத்து கேளிக்கையாக சித்தரித்து சமூக வலைதளங்களில் செய்திகளையும் , படங்களையும் வெளியிட்டுள்ளனர் . 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் இவரின் youtube சேனல் 4.23 மில்லியன் பார்வையை பெற்றது .


இதன்பின் அதிகமாக கேளிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதால் திரைப்படங்கள் , தொலைக்காட்சி தொடர் , இசை ஆல்பங்கள் போன்றவற்றில் நடிப்பதை நிறுத்தி கொண்டார் .


தற்போது போக்ரா அருகில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார் . தமிழ்நாட்டில் சாம் அன்டேர்சன் , பவர் ஸ்டார் போன்று பங்களாதேசில் அலாம் .

சுருக்கமாக

சூப்பர் ஸ்டார் இல்லை பங்களாதேசின் பவர் ஸ்டார் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க