YouTurn

இராணுவ வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை குறைத்தது மத்திய அரசு.

இராணுவ வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை குறைத்தது மத்திய அரசு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

“ தியாகிகளின் குழந்தை ” என்ற பெயரில் தொடங்கபட்ட திட்டத்தின் மூலம் போரில் இறந்த, காணாமல் போன அல்லது பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்விக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் நாடு உருவாக நிகழ்ந்த போருக்கு பிறகு இத்திட்டமானது வலுபெற்றது. போரில் பாதிக்கப்பட்ட...

பரவிய செய்தி

போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை ரூ.10000 ஆக குறைத்துள்ளது மத்திய அரசு.

விரிவான விளக்கம்

“ தியாகிகளின் குழந்தை ” என்ற பெயரில் தொடங்கபட்ட திட்டத்தின் மூலம் போரில் இறந்த, காணாமல் போன அல்லது பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்விக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் நாடு உருவாக நிகழ்ந்த போருக்கு பிறகு இத்திட்டமானது வலுபெற்றது. போரில் பாதிக்கப்பட்ட வீரர்களின் குழந்தைகளுடைய படிப்பு மற்றும் விடுதி கட்டணம் போன்றவற்றிக்கு உதவித்தொகையானது அவர்கள் முதுநிலைப் பட்டம் பெறும் வரை வழங்கப்படும். அதன் பின் மேகதூத் மற்றும் பவான் ஆகிய இரு நடவடிக்கைகளில் இறந்த மற்றும் பாதிக்கபட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்காக மட்டும் நீட்டிக்கப்பட்டது.

போரில் பாதிக்கப்படும் இந்திய வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை மாதம் ரூ.10000 ஆக குறைப்பதாக ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு ஆணையைப் பிறப்பித்தனர்.  உதவித்தொகை குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைகளின் மூத்தத் தலைவர் தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.



இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் சுபாஷ் பாம்ரே ராஜ்ய சபாவில் அளித்த விளக்கத்தில், 2017-2018  ஆம் ஆண்டில் மொத்தம் 2,679 மாணவர்களில் 193 மாணவர்களுடைய கட்டணத்திற்காகவும், சேமிப்பிற்காகவும் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட தோராயமாக ரூ.3.20 கோடி அதிகம் செலவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.18.95 லட்சம் வரை ஒரு மாணவனுக்கு செலவிடப்படுகிறது என்று கூறியுள்ளார்.

    இதற்கு முன்பாக இந்திய கடற்படை அட்மிரல் சுனில் லான்பா, "இராணுவத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நாட்டிற்காக தங்கள் வாழ்வை அர்பணிக்கின்றனர். நாட்டின் பாதுகாப்பிற்காக உழைக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. எனவே குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை குறைப்பது சரியல்ல. இதனால் 3,400 வீரர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று இந்திய பாதுக்காப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் வாயிலாக கூறியிருந்தார்".

இதைக் குறித்து மத்திய பாதுக்காப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் " இது ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சனை, தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினை மதிக்கின்றேன். அவர்கள் இதனால் காயப்பட்டிருப்பார்கள் என்று தெரியும். ஆகையால், இந்த முடிவை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்வேன்" என்று கூறி இருந்தார்.



இதைக் குறித்து கடந்தாண்டு டிசம்பர் 8-ம் தேதி "YOUTURN" பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.

இராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை குறைத்ததை மாற்றக்கோரிய ஆயதப்படைகளின் மூத்த தலைவரின் வேண்டுகோளை அரசாங்கம் புறக்கணித்தது.

பல்வேறு கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு பிறகு மறுபரிசீலனை செய்வதாகக் கூறிய பாதுகாப்பு அமைச்சகம், தற்போது கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறியுள்ளனர்.

சுருக்கமாக

கல்வி உதவித்தொகை குறைப்பதை எதிர்த்து எழுந்த கோரிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்வதாகக் கூறிய மத்திய அரசு, தற்போது கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறியுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க