YouTurn

இரயில்வே உணவுகள் மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதில்லை.

இரயில்வே உணவுகள் மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதில்லை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய பாராளுமன்றத்தில் இந்திய தலைமை தணிக்கைக்குழு தலைவர் ஓர் அறிக்கையை தாக்கல் செய்தார் . அதில் இந்திய ரயில்வேயில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல , அசுத்தமானது , மறுசுழற்சி செய்யப்பட்டது , கெட்டுப்போன உணவுகளை கொடுப்பதாகவும் , அனுமதி இல்லாத தண்ணீர் பாட்டில்கள் விற்பனை...

பரவிய செய்தி

இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல .

விரிவான விளக்கம்

  இந்திய பாராளுமன்றத்தில் இந்திய தலைமை தணிக்கைக்குழு தலைவர் ஓர் அறிக்கையை தாக்கல் செய்தார் . அதில் இந்திய ரயில்வேயில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல , அசுத்தமானது , மறுசுழற்சி செய்யப்பட்டது , கெட்டுப்போன  உணவுகளை கொடுப்பதாகவும் , அனுமதி இல்லாத தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளனர் .


உணவு தயாரிக்கும் பணிகளை செய்பவர்கள் ரயில்வே கொள்கைகளை கடைப்பிடிக்காமல் தவறாக நடந்து கொள்கின்றனர் . மேலும் இந்த ஆய்வில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை இவர்கள் மேற்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர் . அவர்கள் விற்பனை செய்யும் பொருள்களுக்கு ரசீது போன்றவை வழங்குவதும் இல்லை .


தணிக்கைக் குழுவும் , நிர்வாகமும் சேர்ந்து 74 ரயில்வே நிலையங்களிலும் , 80 ரயில்களிலும் மேற்கொண்ட ஆய்வில் முடிவில் ரயில்களிலும் , நிலையங்களிலும் உணவு தயாரிப்பில் சுத்தம் , சுகாதாரம் மேற்கொள்வதில்லை என்று கூறியுள்ளனர் .


மக்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தகமாக வருவது இல்லை , குப்பைத்தொட்டிகள் சரியாக சுத்தம் செய்வது இல்லை , உணவு பொருள்கள் நன்றாக மூடப்படுவதில்லை . இதனால் பூச்சிகள் , ஈக்கள் , எலிகள் போன்றவற்றால் நோய் தொற்று ஏற்படலாம் என்றெல்லாம் கூறினர் .


குஜராத் ரயில்களில் உணவு பட்டியலில் அல்லாத உணவுகளை வழங்குவதாகவும் , எண்ணிக்கைகள் குறைவாகவும் , அனுமதி இல்லாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன .


நம் தேசத்தில் எங்கும் ஊழல் உள்ளது என்பதற்கு இது போன்ற பல செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கின்றோம் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க