YouTurn

இமயமலையில் பெண் வடிவில் பூக்கும் அரிதானப் பூக்களா ?

இமயமலையில் பெண் வடிவில் பூக்கும் அரிதானப் பூக்களா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாரிலதா என்பதை ஹிந்தி மொழியில் பிரித்து பார்க்கும் பொழுது நாரி-பெண், லதா-சிறு கொடி தாவரம் என்று அர்த்தம் கிடைக்கிறது. இமயமலையில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கின்ற நாரிலதா மலரானதுபெண்ணின் வடிவத்தில் உள்ளது. நாரிலதா என்ற பெயரில் மலர்கள் இருப்பது உண்மை தான். ஆனால் இணையங்களில் நாரிலதா மலர்...

பரவிய செய்தி

இமயமலையில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கின்ற நாரிலதா மலரானது பெண்ணை போன்ற வடிவத்தில் உள்ளது.

விரிவான விளக்கம்

நாரிலதா என்பதை ஹிந்தி மொழியில் பிரித்து பார்க்கும் பொழுது நாரி-பெண், லதா-சிறு கொடி தாவரம் என்று அர்த்தம் கிடைக்கிறது. இமயமலையில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கின்ற நாரிலதா  மலரானதுபெண்ணின் வடிவத்தில் உள்ளது. நாரிலதா என்ற பெயரில் மலர்கள் இருப்பது உண்மை தான். ஆனால் இணையங்களில் நாரிலதா மலர் என்று காணப்படும் பெண்வடிவிலான படங்கள் அனைத்தும் தவறானவையே.


லதா என்றால் கொடி என்று அர்த்தம், ஆனால் இங்கு மரத்தில் மலர்வதாக காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் உள்ள சில மலர்களில் காம்பானது தலையில் இணைந்துள்ளது, சில மலர்களில் பின்புறத்தில் இணைந்துள்ளது. மேலும் அச்சடித்து போல் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இந்த படங்கள் போட்டோஷாப் எடிட்டிங் ஆகவோ அல்லது பொம்மைகளை ஒட்டி வைத்து எடுத்த படங்களாகவோ இருக்கலாம்.


 நாரிலதா


    சீனாவில் புத்தர் மற்றும் குழந்தைகள் வடிவில் பேரிக்காய்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர். பழங்கள் வளரிளம் பருவத்தில் அச்சுகளில் அடைத்து வைத்து விடுவர். இவை வளரும் போது அச்சுகளில் உள்ள எல்லைகளுக்குட்பட்டு தேவையான வடிவங்களில் வளர்ந்து விடுகின்றன. ஜப்பானில் தர்பூசணி பழங்கள் சதுர வடிவ பெட்டிகளில் அடைத்து வைத்து விடுகிறார்கள். இவை வளர்ந்த பின் சதுர வடிவங்களில் கிடைப்பதால் ஏற்றுமதி செய்ய எளிதாக இருக்கும் என்று இவ்வாறு செய்கின்றனர்.


புத்தர் மற்றும் குழந்தைகள் வடிவில் பேரிக்காய்கள் மற்றும் சதுர வடிவ தர்பூசணி போன்று பார்க்க வித்தியாசமாக இருந்தால் விற்பனை அதிகமாக இருக்கும் எண்ணி இவ்வாறு செய்து வருகிறார்கள். நாரிலதா மலர் என்று கூறி காண்பிக்கப்பட்ட பழங்களும் இது போன்ற அச்சுகளில் வளர்க்கப்பட்ட பழங்களா இருக்கலாம் அல்லது போட்டோஷாப் போன்றவையாக இருக்கலாம்.

சுருக்கமாக

பழங்களின் விற்பனையை அதிகரிக்க பழங்கள் வளரும் பருவத்தில் பல வடிவங்களில் உள்ள அச்சுகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க