YouTurn

இந்தியாவில் எபோலா வைரஸா ?

இந்தியாவில் எபோலா வைரஸா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆப்ரிக்கா நாடுகளை அச்சுறுத்திய ஓர் வைரஸ் தான் எபோலா வைரஸ் . அந்நாடுகளில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டதால் தவிர்க்கப்பட்டது . ஆனால் இந்த வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டது என்று செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது . இந்த வைரஸால் கர்நாடக...

பரவிய செய்தி

வட ஆப்பிரிக்காவை உலுக்கிய எபோலா வைரஸ் இப்பொழுது இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது . கர்நாடகாவை சேர்ந்த NIT மாணவன் ஒருவர் இந்த வைரஸால் இறந்து உள்ளார் . இதில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி நீரை பருகுங்கள் . மேலும் வெந்நீரையும் , உப்பையும் குடிப்பதற்கும் , குளிப்பதற்கும் பயன்படுத்துங்கள் . இந்த செய்தியை உடனடியாக அனைவருக்கும் பகிருங்கள் .

விரிவான விளக்கம்

ஆப்ரிக்கா நாடுகளை அச்சுறுத்திய ஓர் வைரஸ் தான் எபோலா வைரஸ் . அந்நாடுகளில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டதால் தவிர்க்கப்பட்டது . ஆனால் இந்த வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டது என்று செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது .


இந்த வைரஸால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவன் இறந்ததாகவும் , அதில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி நீரையும் , வெந்நீரையும் , உப்பையும் குடிப்பதற்கும் , குளிப்பதற்கும் பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர் .


ஆனால் இது போன்ற எந்த ஒரு வைரஸும் இந்தியாவிற்குள் நுழையவில்லை . 2004 இல் லிபேரியாவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 26 வயதுத்தக்க செமன் என்ற இளைஞர்க்கு எபோலா வைரஸின் அறிகுறி இருந்தது என்று கூறி அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர் . இரத்தப் பரிசோதனையில் அவருக்கு வைரஸ் இருப்பதாக கூறப்பட்டது .


எனினும், லிபேரியா அரசாங்கம் வழங்கிய மருத்துவ சோதனை சான்றிதழில் வைரஸின் அறிகுறி இல்லை என்று குறுப்பிட்டுள்ளனர் . இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் என்பதால் எளிதாக இந்த வகை வைரஸ் வேகமாக பரவி விடும் . மேலும் எபோலா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்தால் பேரழிவை எற்படுத்தும் . எனவே இதை கருத்தில் கொண்டு அந்த இளைஞரை அனுமதிக்கவில்லை .


மேலும் இந்த வைரஸால் இந்தியாவில் எவரும் இறக்கவில்லை . எபோலா வைரஸ் பரவ காரணம் ஒழுங்கற்ற உடல் உறவு போன்றவையே காரணம் என்று கூறியுள்ளனர் . இவைகளை போன்ற செய்திகளால் மக்களுக்கு அச்சம் ஏற்ப்பட வாய்ப்புள்ளதால் தவறான செய்திகளை பகிரவேண்டாம் .

சுருக்கமாக

எபோலா வைரஸ் இந்தியாவிற்குள் நுழையாமல் தடுத்துள்ளனர் , இந்த வைரஸால் யாரும் இறக்கவில்லை ...

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க