YouTurn

இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்டில் பரதநாட்டியத்தின் படம்.

இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்டில் பரதநாட்டியத்தின் படம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஐக்கிய ராஜ்ஜியம்(யுனைட்டெட் கிங்டம்) என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டானது ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு புதிய வடிவில் வெளியிடப்படும். இந்நிலையில் 2015-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட் அலுவலகம் தனது சமீபத்தியப் பதிப்பை வெளியிட்டது. இங்கிலாந்தின்...

பரவிய செய்தி

இந்திய நடனமான பரதநாட்டியத்தின் படம் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்டில் இடம்பெற்றுள்ளது.

விரிவான விளக்கம்

ஐக்கிய ராஜ்ஜியம்(யுனைட்டெட் கிங்டம்) என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டானது ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு புதிய வடிவில் வெளியிடப்படும். இந்நிலையில் 2015-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட் அலுவலகம் தனது சமீபத்தியப் பதிப்பை வெளியிட்டது.


இங்கிலாந்தின் புதிய பாஸ்போர்ட்டில் குறுப்பிட்ட சிறந்த நபர்களின் படங்களும், நாட்டின் முக்கிய நிகழ்வுகளும், இடங்களும், கலை மற்றும் கலாச்சாரத்தின் சின்னங்கள் போன்றவை இடம்பெறும். தற்பொழுது உள்ள புதிய பாஸ்போர்ட்டில், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தின் கட்டிடம், லண்டன் கண், டைட்டானிக் பெல்ஃபாஸ்ட் போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளன. மேலும் லண்டனில் உள்ள ஷேக்ஸ்பியரின் குளோப் தியேட்டர் கலைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் அமைத்திருக்கும்.


மேலும், பாஸ்போர்ட் பக்கத்தில் முக்கியமாக இடம்பெறும் இரண்டு பெண்களில் ஒருவர் எலிசபெத் ஸ்காட், மற்றொருவர் கணிதவியல் அறிஞர் அடா லவ்லேஸ் ஆவர்.


                                                                    


பாஸ்போர்ட்டின் ஓர் பக்கத்தில் கலைகளை கௌரவிக்கும் நோக்கத்தில், நாட்டில் கொண்டாப்படும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார விழாக்களின் படங்கள் இடபெற்றிருக்கும். இத்தைகைய கலாச்சாரம் மற்றும் கலைகளை வெளிப்படுத்தும் பக்கத்தில் இந்தியாவின் பரதநாட்டியத்தின் படமும் உள்ளது. அதில் பெண் ஒருவர் பரதம் ஆடுவது போன்று படம் அமைந்திருக்கும். பல நாடுகளில் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டில் இந்தியாவின் பாரதம் இடம்பெற்றிப்பது, அக்கலைக்கு கிடைத்த கௌரவம் ஆகும்.


இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டில் இந்தியாவின் பரதநாட்டியக் கலை இடம்பெற்றுள்ளது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியது. இச்செய்தியானது நம் நாட்டின் பரதக் கலைஞர்களை உற்சாகம் ஊட்டும் விதத்தில் அமைத்துள்ளது.

சுருக்கமாக

பரதநாட்டியத்தின் படம் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்டில் இடம்பெற்றிருப்பது இங்கிலாந்தில் பன்முக கலாச்சார விழாக்களைக் கொண்டாப்படுகிறது என்பதைக் குறிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

ஆதாரங்கள்

THE GUARDIAN 

culture india image
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க